சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்

இந்து தீவிரவாதம் என்ற பொய் வெளுத்த கதை – Let me say it now by Rakesh Maria – பாகம் 1

ராகேஷ் மரியா – பாகிஸ்தான் தீவிரவாதத்தின் அப்பன் தாவூது முதல் அவனுக்கு தாக்கீது சொல்லும் லோக்கல் சுப்பன் வரை கேட்டதும் கடுங்கோடையிலும் சுண்டு விரல் காட்டிவிட்டு ஓடிப்போய்த் திரும்ப வரும் போலீஸ்காரரின் பெயர்.
அஜ்மல் கசாப் – இந்தப் பெயரை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க இயலாது. 

நவம்பர்  26, 2008 அன்று இரவு கிட்டத்தட்ட 60 பேரை மும்பை ரயில் நிலையத்தில் குருவி சுடுவது போல சுட்டுக் கொன்று விட்டு 100 பேருக்கு மேல் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, அடுத்து தாஜ் ஓட்டலா வேறெங்கே என்றபடி சகாக்களுடன் வண்டியேறியவன். 
காமா ஆஸ்பத்திரிக்குப் போய் நோயாளிகளைச் சுட்டுக்கொல்ல உத்தரவு வந்தது. போகும் வழியில் தெருவில் போகும் மனிதர்களைச் சுட்டுக் கொண்டே போனார்கள். 8 போலீஸார் இறந்து போனார்கள். 15-20 பொதுமக்கள் காயமடைந்தார்கள்.

ஆயுதம் இல்லாவிட்டாலும் பொதுமக்களைக் காப்பாற்ற அவர்களைச் சூழ்நது மறைத்துக் கொண்டு உயிர்விட்டு மக்களைக் காத்த போலீஸ் அவர்களுக்குப் புதிது. பிரச்சனை என்றால் பொது மக்களைப் போட்டுத்தள்ளும் போலீஸ் தான் எல்லைக் கோட்டுக்கு அந்தப்பக்க வழக்கம்.
ஆஸ்பத்திரி திட்டம் செயல்படுத்த முடியாமல் போனது. ஹேமந்த் கர்க்கரே, துக்காராம் ஓம்பளே, அஷோக் ஆம்டே, விஜய் சலாஸ்கர், அருண் ஜாதவ் என்று சில போலீஸ் ஏட்டையாக்கள் மற்றும் அதிகாரிகள் ஆஸ்பத்திரி அருகே ஒரு சிறு சந்தில் இருந்து இவர்கள் சுட்டதற்குத் திருப்பிச்சுட்டனர். எதிர்ப்பு வந்தது இவர்களுக்கு அதிசயம். 


திகைத்து நிற்கும் பம்பாய் போலீஸ். கண்ணில் கண்ட யாரையும் சுட்டுத்தள்ளுங்கள் என்பது தான் அவர்களுக்கான உத்தரவு. இவ்வளவு விரைவில் எதிர்வினை வரும் என்பதை இவர்களை ஏவியவர்களும் எதிர்பார்த்திருக்கவில்லை. 


போலீசார் சுட்டதில் கசாப்போடு வந்திருந்த இஸ்மாயில் கான் செத்துப் போனான். கசாப்பை பிடிக்க ஓடிய ஏட்டையா துக்காராம் ஓம்ப்ளே குண்டடி பட்டும் விடாமல் ஓடி அவனைப்பிடித்துக் கீழே தள்ளி அவன் மேல் பாயந்து அழுத்திக்கொண்டார். துப்பாக்கியைத் தூரத்தில் உதைத்துத் தள்ளிவிட்டார். நல்ல குண்டான ஏட்டையா மேலே கிடக்க தள்ளிவிட்டு எழுந்து தள்ளாடிய கசாப்பின் காலில் பலத்த அடி. ஏட்டையா கையில் கிடைத்த எதையோ வைத்துக் குத்திவிட்டு உயிர்விட்டிருந்தார். 


தள்ளாடித் தள்ளாடித் துப்பாக்கி நோக்கிப் போனவனை துரத்தி வந்த போலீஸ் குழு வளைத்துப் பிடித்தது. மும்பை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் குண்டுகள் வைத்தும் பொது மக்களைச் சுட்டும் நாசகாரிகளின் மொத்த உருவமாக வலம் வந்தனர் சிறப்புப் பயிற்சி பெற்ற பத்து லஷ்கர் தீவிரவாதிகள். போலீஸ் அதிரடிப்படை, துணை ராணுவம், தேசிய பாதுகாப்புக் குழு கமாண்டோக்கள் பலர் கையில் பிறர் (திட்டப்படி) இறந்துவிட தப்பிப் போய் மாட்டிக் கொண்டான் கசாப்.

அவனைக் கொல்ல அனைத்து வகையிலும் முயன்றது பாகிஸ்தான் கூலிப்படை. பாதுகாப்பாக அவனை ரகசிய இடத்தில் வைத்துக் கொண்டது போலீஸ். இங்கே தான் பலரது திட்டங்கள் தவிடுபொடியாகி உண்மை தலைநிமிர அவகாசம் கிடைத்தது. 

(Visited 275 times, 1 visits today)
2+
Tags
Show More

2 Comments

  1. நவம்பர் 26- 2008 என்று நிறுத்திக்கொள்ளுங்கள் . நன்றி .

    0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close