ஆன்மிகம்செய்திகள்

ஐயப்பன் சஹஸ்ரநாமம் – முன்னுரை -1

என் யூரோ சர்ஜன் நல்ல ஐயப்ப பக்தர். 2 வருஷம் முன் தீபாவளி சமயத்தில் ஆரம்பித்த யூரிடரிக் ஸ்டோன் பிரச்சினை முதல் பலதுக்கும் உதவி இருக்கிறார். அப்படிப்பட்டவர் ஒரு உதவின்னு கேட்கிறப்ப…. மறுக்க முடியுமா?

ஒரு நாள் அசிஸ்டண்ட் சர்ஜன்கிட்டேந்து மெசேஜ் – இவருக்கு சஹஸ்ரநாமம் உரை வேணும்ன்னு. அப்படி கேள்விப்பட்டா சாதாரணமா நினைவுக்கு வரது விஷ்ணு சஹஸ்ரநாமந்தானே?

ஆனா எதோ சந்தேகம் தட்டி எந்த சஹஸ்ரநாமம் ன்னு கேட்டேன். அதானே பிஜி கேள்வி கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டு அப்பறமா ஐயப்பன் சஹஸ்ரநாமம் ன்னு மெய்ல் அனுப்பினார்! அட அப்படி ஒரு சஹஸ்ரநாமம் கூட இருக்கானான்னு ஆச்சரியப்பட்டு வழக்கமா சம்ஸ்க்ருத சமாசாரம் தேடற sanskritdocuments.org போய் பாத்தா, அட ஆமா இருக்கு! ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி

சரின்னு இறக்கியாச்சு. ஆனா அவர்கேட்டது அர்த்தம்தானே?

இது எனக்கு ஒரு பிரச்சினை. நிறைய பேர் எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியும்ன்னு நினைக்கிறாங்க. வேத அத்யயனம் செஞ்சதால போலிருக்கு. இந்த கால் கட்டத்தில முக்காவாசி வேத அத்யயனம் செய்யறவங்களுக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. இப்பத்தான் ஶ்ரீ மடத்தில வேதம் அத்யயனம் செஞ்சவங்க சம்ஸ்க்ருதமும் பாஸ் பண்ணனும்ன்னு விதி கொண்டு வந்து இருக்காங்க.

எங்கயோ போய்ட்டேன்.

சரி கூகுளார் தயவு பண்ணுவார்ன்னு தொடர்ந்து தேடினா ஒண்ணும் கிடைக்கலை. பேஸ்புக் குருசாமி மோகன்கிட்ட எனி எல்பு ன்னு கேட்டா கொடுக்கலை.

சரி கஷ்டமான வழில இறங்கிட்டேன்.

இணைய சம்ஸ்க்ருத டிக்‌ஷனரி திறந்து வெச்சுகிட்டு வார்த்தைகளை உடைச்சு பொருள் பாக்க ஆரம்பிச்சேன். ஒரு பாதி தேறித்து. மீதி? பையரை கன்சல்ட் பண்ணலாம்ன்னு கூப்டு விவரம் சொன்னா “அட, நீ ஏன்பா கஷ்டப்படறே? அது செஞ்சிருப்பாங்க” ன்னு சொன்னார். ரெண்டு நண்பர்கள் இருக்காங்க. கேட்டுச்சொல்லறேன்னார். அது படியே கேட்டு “இருக்கு. ஆனா நண்பர் காலை உடைச்சுண்டு ஆபரேஷன் செஞ்சு ஆஸ்பத்திரில இருக்கார். வீட்டுக்கு போனதும் அனுப்புவார்” ன்னு … அப்பாடா!

ஒரு வாரத்தில புத்தகம் வீடு தேடி வந்துது. நல்ல தடிமனான புத்தகம். அதுல ஐயப்பன் சம்பந்தமா பலதும் இருந்தது.

கொண்டு போய் கொடுத்தேன்; யூரோ சர்ஜன் அப்படியே புளகாங்கித வசப்பட்டுப்போயிட்டார். ரொம்ப மரியாதையோடவாங்கி புரட்டிப்பாத்து அங்க இருந்தஐயப்ப படத்துகிட்ட வெச்சு… இந்தமாதிரி பக்தி நமக்கு இல்லியேன்னு நினைச்சுண்டேன்!

சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் அவர்கள் பாஷ்யம் எழுதி இருக்கார்.

அடுத்த பதிவுலேந்து வரிசையா போடலாமா?

(Visited 11 times, 1 visits today)
2+
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close