செய்திகள்தமிழ்நாடு

குளச்சல் துறைமுகத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதே திமுக ஆட்சியில்தான்: பொன்.ராதா

குகுளச்சல் துறைமுகத் திட்டம் திமுக ஆட்சியில்தான் கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு பாஜக ஆட்சியில் ஆய்வுகளை மேற்கொண்டது. முதலில் ஒதுக்கப்பட்ட இடத்தில்  குளச்சலில் துறைமுகம் அமைந்தால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வீடுகள் இடியும் என்பதால்தான் மாற்று இடத்தை தேர்வு செய்தோம். அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இப்படி எதிர்த்தால் குமரி வளர்ச்சி அடையாது.  மார்த்தண்டத்தில், இந்திய மருத்துவ சங்கத்தின் கிளையில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது;

குமரியில் தற்போது நிறைவேற்றி வரும் திட்டங்கள் அனைத்தும் 1999 ம் ஆண்டு வாக்குறுதி கொடுத்தவை என்றும் அதன் பிறகு வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டத்தைச் செயல்படுத்த தவறிவிட்டன. பின்னர் தற்போது பாஜக ஆட்சியில் தான் மீண்டும் மேம்பாலம் அமைக்கும் பணி, சாலை திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

மேலும் குளச்சல் வர்த்தக துறைமுக திட்டத்திற்கும் அப்போதே ஆய்வு மேற்கொள்ளப்பட்டன ஆனால் 2001 ல் கலைஞர் ஆட்சியில் மக்களுக்கு தெரியும். இந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை அடுத்த ஆட்சியில்இல்லாமல்  போகச் செய்வார்கள் அல்லது கிடப்பில் போடுவார்கள்.அடுத்த ஆட்சியில் கொண்டு வரும் திட்டங்களை, அதற்கு அடுத்து வரும் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடுவார்கள். அவ்வாறு குளச்சல் துறைமுக திட்டம் கிடப்பில் போடப்பட்டது.  இது தேவையான திட்டம். குமரியின் வளர்ச்சிக்கு இத்திட்டம் பெரும் பலனை அளிக்கும். இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.

(Visited 31 times, 1 visits today)
1+
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close