உலகம்

தமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.

மதங்களும் நாத்திக வாதமும் :

நாத்திக வாதம்  இந்துக்களுக்கு ஒன்றும் புதிதல்ல …சார்வாகம் ,  ஜாபாலி என ஆயிரம் உதாரணங்கள் உண்டு .ஹிந்து மதம் எப்பொழுதும் திறந்த மனதுடன் , மாற்றுக் கருத்துக்களுடன் உரையாடியே வந்துள்ளது .ஆனால் ஆபிரகாமிய மதங்களைப்    பொருத்தவரை  மாற்றுக்கருத்து என்ற ஒன்றே கிடையாது ..அங்கு விவாதத்திற்கு இடமே இல்லை.. அவர்களுடைய மதப்புத்தகத்தில் சகலமும் அடங்கி இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். சகலத்திற்கும் அதில் விடை  இருப்பதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள் . அது அந்தந்த மதத்தின்  கட்டமைப்பு .அதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கப் போவதில்லை .

திராவிட இயக்கங்களின் ஹிந்துமத துவேஷம் :

உண்மையான நாத்திக வாதம் என்பது சகல மதங்களையும் , சகல நம்பிக்கைகளையும் கேள்வி கேட்பது ..விமர்சனம் செய்தது.. மத நம்பிக்கைகளில் இருந்து விலகி இருப்பது தான் உண்மையான நாத்திகவாதம் .ஆனால் திராவிட இயக்கங்களின் நாத்திகவாதம் என்பது முழுக்க முழுக்க ஹிந்து மத விரோதமானது மட்டுமே …மற்ற மதங்களைப் பற்றி இவர்கள் மூச்சு கூட விட மாட்டார்கள். ஒரே ஒருமுறை இஸ்லாம் பற்றி வாயை திறந்த ஈவேரா வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டார். அதன் பிறகு இவர்கள் வாயை திறந்ததே கிடையாது..

நமது அரசியல் சட்டம் சகல விதமான மத நம்பிக்கைகளையும் அங்கீகரிக்கிறது .அவரவ‌ருடைய மதத்தை பின்பற்ற அவரவருக்கு சுதந்திரம் உள்ளது .பிறருடைய மதநம்பிக்கை புண்படும்படி பேசுவதோ ,  பிரச்சாரம் செய்வதோ,  அரசியல் சட்டப்படி குற்றமாகும்.. ஆனால் தமிழகத்தில் மட்டும் இந்த சட்டம் செல்லுபடியாகாது… இங்கே இந்து மதத்தை யார் வேண்டுமானாலும் எவ்வளவு இழிவாக வேண்டுமானாலும் பேசலாம் …கேட்பாரே கிடையாது.. திராவிடர் கழகம்  தேர்தலில் போட்டியிடாத இயக்கம்… ஆகவே அவர்களின் ஹிந்துவிரோதப் பிரச்சாரம்  பெரிய விஷயமாகப் படவில்லை…

திமுக என்னும் ஹிந்து விரோதிகள் கூட்டமைப்பு :

திமுகவில் இருந்த திராவிட முன்னேற்றக்கழகம் பிரிந்து அரசியல் கட்சியாக இயங்க ஆரம்பித்த பிறகும் கூட அவர்கள் போக்கில் எந்த மாற்றமும் இல்லை …அண்ணாத்துரை  தொடங்கி கருணாநிதி தற்போது ஸ்டாலின் வரை . தொடர்ந்து ஹிந்துவிரோதப்போக்குடனே அந்தக் கட்சி இயங்கி வருகிறது .அது மட்டுமல்ல பல ஹிந்து விரோத இயக்கங்களையும் வளர்த்துவிட்டு இருக்கிறது திமுக.

இடதுசாரிகளைப் பற்றி தனியாக பேச வேண்டியதில்லை.. அவர்களை எந்த தேசத்தில் கால் வைத்தாலும் முதலில் அந்த தேசத்தில் உள்ள பூர்வகுடி மத நம்பிக்கைகளை முழுமையாக அழித்து ஒழிப்பார்கள் ..அதன்பிறகு இவர்கள் போட்டுக் கொடுக்கும் ராஜபாட்டையில் ஆபிரஹாமிய மதங்களில் உள்ளே வரும்.. இதைத்தான் அவர்கள் ஒவ்வொரு தேசத்திலும் செய்து வருகிறார்கள் …

தமிழகத்தில் இன்று விரோதமாக செயல்படாத‌ கட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்… அதிலும் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்துக்களை இழிவுபடுத்துவடையே  வழக்கமாக கொண்டிருக்கிறது ..அண்ணாத்துரை மதுரை மீனாட்சி அம்மனை பற்றி பேசிய பேச்சுக்களும் , கருணாநிதி திருவரங்கம் அரங்கநாத னையும் தில்லை நடராஜனையும் பீரங்கி வைத்து பிள‌ப்பது எக்கால‌ம் என்று பேசியதையெல்லாம் இன்னும் யாரும் மறந்து விடவில்லை.. செல்வி . ஜெயலலிதா அவர்கள் தமிழக  முதல்வராக இருந்தபோது மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்தார்..அதை எதிர்த்து கிருத்துவர்கள் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி , ஹிந்து என்றால் திருடன் என்று பேசினார்.. வெறும் பேச்சோடு நிறுத்திக்கொள்ளாமல் , தமிழ்ப்புத்தாண்டை தை முதல் தேதிக்கு மாற்றவும் உத்தரவிட்டார்…[ அதை எவரும் சீண்டவில்லை என்பது வேறு விஷயம்…  ]

சீரான இடைவெளியில் ஹிந்து மத  நம்பிக்கைகளை இழிவுப‌டுத்திக் கொண்டே இருப்பது கருணாநிதியின் வழ‌க்கம்… அவர் மட்டுமல்ல அந்தக் கட்சியை சார்ந்த அல்லு சில்லுகளெல்லாம் இதே வேலையை தொடர்ந்து செய்யும்..

கருணாநிதி செயலிழந்த‌பிறகு ஸ்டாலின் செயல் தலைவராக பொறுப்பேற்றார் …பி கருணாநிதியின் மகள் மறைவுக்குப்பிற‌கு  கட்சி தலைவராகவும் ஆனார்…ஆரம்பத்தில் அவர் பொறுப்புக்கு வந்தபோது இனி திமுகவின் இந்து விரோத போக்கில் ஒரு மாற்றம் இருக்கும் என்று நான் உட்பட பலரும் எண்ணியது வாஸ்தவம் …தேசம் முழுக்க கிளம்பியிருக்கும் ஹிந்துத்வ அலை  ஏற்படுத்திய தாக்கம் திமுகவிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என நினைத்தோம்…ஆனால் , ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கருணாநிதியை விட மிக மூர்க்கத்துடன் மூடத்தனமாக ஹிந்து மதத்தை எதிர்க்க ஆரம்பித்தார் …தான் மட்டும் அப்படி பேசியதோடு அல்லாமல் தமிழகம் முழுக்க உள்ள ஹிந்து விரோத சக்திகளை தூண்டிவிட்டு இந்துமதத்தை இயன்றவரை கேவலப்படுத்தினார்… அவருடைய கட்சியின் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் தமிழன் பிரசன்னா , அப்துல்ஹமீது என்கிற மனுஷ்யபுத்திரன் ,  டிகேஎஸ் இளங்கோவன் போன்றோர்  வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஹிந்து மதத்தை இழிவு செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள்… இதற்கெல்லாம் ஸ்டாலின் எந்த தடையும் சொல்லவில்லை …இப்படிப் பேசக் கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்தவும் இல்லை..

மாறாக அவரே முன்னின்று இந்த வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்… மாற்று மதத்தை சேர்ந்த ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொண்டு ஹிந்து திருமண நம்பிக்கைகளை மிகக் கேவலமாக விமர்சித்தார்… துண்டு சீட்டில் எழுதிக் கொடுத்திருப்பதையே சரியாக பார்த்து படிக்கத் தெரியாமல் உளறிக்கொட்டும் இவர் சமஸ்கிருத மந்திரங்களை எப்படி புரிந்து கொண்டார் …அது இழிவானது என்பதை எப்படி தெரிந்து கொண்டார் என்பதெல்லாம் பகுத்தறிவுக்கே வெளிச்சம்…

திருவரங்கத்தில்  ,ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்த ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது…அப்போது நெற்றியில் வைத்த குங்குமத்தை உடனடியாக அழித்தாட்… மிக சமீபத்தில்  , இன்னொரு ஹிந்து விரோதியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சனாதன தர்ம எதிர்ப்பு மாநாடு ஒன்றை நடத்தினார்… அதில் சனாதனத்தை வேரறுப்போம் என்று சூளுரைத்தாட்… அந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின் சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்று அவரும் வழிமொழிந்தார் …சனாதனம் என்ற வார்த்தையை கூட சரியாக உச்சரிக்க தெரியாமல் வழக்கம் போல உளறி கொட்டினார் அது வேறு விஷயம் …ஆனாலும் அவருடைய உள்ளக்கிடக்கை வெளியானது …ஆக திமுக என்னும் இயக்கம் இந்து மதத்தை அளிப்பதை தான் தன்னுடைய தலையாய கடமையாக வைத்திருக்கிறது என்பது தமிழர்கள் அனைவருக்கும் உறுதியானது …

ஆஹாவென்றெழுந்தது பார் ஹிந்து எழுச்சி! :

இனி தமிழகத்தில் ஹிந்து மதம் பிழைத்து கிடைக்க வேண்டுமானால் திமுக என்னும் ஹிந்து விரோத இயக்கத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய வேண்டிய அவசியம் என்பது இந்துக்கள் அனைவருக்கும் புலப்பட ஆரம்பித்தது… முன்பு போல சகல விதமான மீடியாக்களையும் தங்கள் கையில் வைத்துக் கொண்டு தாங்கள் விரும்பும் செய்தியை மட்டும் மக்களைப் பார்க்க வைத்த காலம் எல்லாம் மலையேறி விட்டது… அனைவர் கையிலும் மீடியா உள்ளது.. பேஸ்புக்  , வாட்ஸ் அப் போன்றவற்றின் மூலமாக இந்து விரோதிகள் பேசும் காணொளி காட்சிகள் உடனுக்குடனான பகிரப்பட்டன…

எங்கோ ஒரு மூலையில் ஒருவர் பேசியது அடுத்த வினாடி உலகம் முழுக்க பரவ  ஆரம்பித்தது…ஹிந்துக்கள் மெல்ல மெல்ல விழிப்புணர்வு பெற ஆரம்பித்தார்கள்…  தாங்கள் காலம் காலமாக தங்கள் பின்பற்றிவரும் நம்பிக்கைகளை ஒரு சிறு கூட்டம் இழிவு செய்வது இப்போது மக்களுக்கு உறைக்க‌ ஆரம்பித்துவிட்டது …எவரோ ஒருவர் சொன்னார் என்று கேட்பது ,  படிப்பதைவிட தானே நேரில் காணும் பொழுது ஏற்படுத்தும் தாக்கம் அபாரமானது… தமிழகம் முழுக்க ஒரு விழிப்புணர்வு உருவாக ஆரம்பித்தது …

இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது திமுக இதன் தாக்கத்தை உணர வில்லை வழக்கம் போல ஒரு மிதப்பில் தான் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள் …இப்படி ஒரு விழிப்புணர்வு ஹிந்துக்களிடம் இருப்பதாகவே அவர்கள் காட்டிக் கொள்ளவில்லை ஆனால் நாளாக ஆக சமூக ஊடகங்களின் தாக்கத்தை உணர ஆரம்பித்தது  திமுக…

வீரமணி என்னும் விஷம் :

பொள்ளாச்சியில் நட‌ந்த பாலியல் சம்பவங்களைப்பேற்றிய திராவிடர் கழகத்தலைவர் வீரமணி கிருஷ்ணரை தொடர்புபடுத்திப்பேசிய பேச்சுக்கள்  எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றியது..திருச்சியில் வீரமணிகலந்துகொண்ட திமுக ஆதரவு பிரச்சாரப்பொதுக்கூட்டத்தில் ஹிந்து அமைப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டது…வீரமணி தப்பி ஓடினார்… திருப்பூரில் வீரமணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது…

வீரமணி தங்கள் பகுதியில் பிரச்சாரம் செய்தால்  ,தங்களுக்கு வரும் ஓட்டுகளும் போய்விடும் என்பதை உணர்ந்த திமுக  மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வீரமணி பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று தலைமைக்கு அறிவுறுத்தினர்.வீரமணி தங்கள் பகுதியில் பிரச்சாரம் செய்தால்  ,தங்களுக்கு வரும் ஓட்டுகளும் போய்விடும் என்பதை உணர்ந்த திமுக  மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வீரமணி பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று தலைமைக்கு அறிவுறுத்தினார்… அதையடுத்து வீரமணியின் பிரச்சாரக் கூட்டங்களை திமுக தலைமை  முழுமையாக ரத்து செய்தது.

உண்மையிலேயே தமிழகத்தில் ஹிந்து எழுச்சி ஆரம்பித்துவிட்டதா?

உங்களுக்கு இன்னுமா சந்தேதகம்? ஸ்டாலின் தாங்கள் ஹிந்து விரோதி அல்ல என்று மேடைக்கு மேடை அலற ஆரம்பித்திருக்கிறார்… கருணாநிதி திருமால் போற்றி , முருகன் போற்றியெல்லாம் வெளியிட்டார் என்கிறார்…பாஜக மட்டும்தான் இந்துக்களின் ஏகபோக பிரதிநிதி என்று கேள்வி எழுப்புகிறார்..

அவருடைய சகோதரி கனிமொழியின் பகுத்தறிவு பிரச்சாரங்கள் எல்லோருக்கும் தெரியும்… திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் பற்றி அவர் பேசியதும் , ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுப்பு அனுமதிப்பது குறித்து அவர் பேசியதும் , தன்னுடைய தந்தை உடல் நலம் குன்றி இருந்த போது அவருடைய உதவியாளர் அவர் நெற்றியில் விபூதி வைப்பதைப் பற்றி கிண்டலடித்து பேசியதும் இன்னும் எல்லோருக்கும் நினைவிருக்கிறது…

அப்படிப்பட்ட புரட்சிகர பகுத்தறிவாளர் கவிதாயினி கனிமொழி தற்போது நெற்றியில் பொட்டு இல்லாமல் வெளியே வருவதே இல்லை …தூத்துக்குடியில் ஒரு கோயில் விடாமல் சுற்றுகிறார்… அவருடைய தாயார் ராசாத்தி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு , தன் மகள் திருச்செந்தூர் முருகன் அருளால் வெற்றி பெறுவார் என்று அறிவிக்கிறார்… இதோ நேற்றுவரை தன்னுடைய டுவிட்டர் ப்ரோபைலை டி.பி. யில் வைத்திருந்த ஈவேரா படத்தை மாற்றி விட்டு பனைமரத்தின் படத்தை வைத்திருக்கிறார் கனிமொழி..

.

பிற ஹிந்துவிரோதிகளின் அலறல்கள்.:

போனமாதம் சனாதனத்தை வேரறுப்போம் என்று மாநாடு நடத்தி சூளுரைத்த திருமாவளவன் சிதம்பரம் கோயிலுக்குச்சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்… மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசன் பெருமாள் கோயிலுக்குச்சென்று சுவாமி தரிசனம் செய்ததோடு , அந்தப்படம் பத்திரிக்கைகளில் வெளியாவதையும் உறுதி செய்துகொள்கிறார்…

 

துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஒருமுறை தமிழகத்தில் ஹிந்துக்களிடயே விழிப்புணர்வு ஏற்பட்டால் திமுகவினர் கோயில்களில் பஜனை செய்யவும் , பழனிக்கு பால்காவடி எடுக்கவும் தயங்கமாட்டார்கள் என்று சொன்னார்…அதுதான் உண்மை …

இவையெல்லாமே சமூக ஊடகங்களின் தாக்கம் தான்….விஷயம் என்னவென்றால் இனி இதையெல்லாம் யாரும் நம்பப் போவதில்லை …சிறுத்தைகளின் உடம்பில் உள்ள கோடுகள் அழிவதில்லை …திமுகவினரின் இந்து விரோத மனப்பான்மையும் மாறப்போவதில்லை… இவர்களின் நாடகம் எல்லாமே வரும் பதினெட்டாம் தேதி வரை தான்… அதற்கு பிறகு இவர்கள் வழக்கம் போல் ஹிந்து மதத்தை வாரித் தூற்றத்தான் போகிறார்கள்… அரசியல் ஆதாயத்துக்காக திமுக எதையும் செய்யும் இவர்களின் நாடகத்தை நம்பாமல் இவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது இந்துக்களின் கடமை…

 

சிவ. சரவணக்குமார்.

(Visited 887 times, 1 visits today)
31+
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close