செய்திகள்தமிழ்நாடு

தேசிய பாதுகாப்பு தொழில் வழித் தடம் தொடக்கம் ; தமிழ்நாட்டில் 3100 கோடி முதலீடு

சென்னை: தேசிய பாதுகாப்பு தொழில் வழித்தடம் நேற்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனால் துவக்கி வைக்கப்பட்டது. ராணுவத்திற்குத் தேவையான ராணுவ தளவாடங்களை, உபரி பொருட்களை சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூலம் தயாரிக்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, சேலம், கொயம்பத்தூர், ஓசூர்  ஆகிய ஐந்து நகரங்கள் தேசிய பாதுகாப்பு தொழில் வழித்தடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 3,100 கோடி அளவில் முதலீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூல சிறிய நடுத்தர நிறுவனங்கள் பலன்பெரும்.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட்டட், பாரத் டைனமிக்ஸ் லிமிட்டட், ஆர்டனன்ஸ் தொழிற்சாலை அமைப்பு முறையே 140.5 கோடி , 150 கோடி , 2305  கோடி முதலீடு செய்யும் என உறுதி அளித்துள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களான டிவிஎஸ் டேட்டா பாட்டர்ன்ஸ், ஆல்பா டிசைன்ஸ் முறையே 50 கோடி ,75 கோடி , 100  கோடி முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளது.

மத்திய அரசின் இந்த தொழில் வழித் தடத்தால் தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் . இது போன்ற புதிய தொழில்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படுவதற்கு வரவேற்பு அந்தந்த பகுதி மக்களிடையே வரவேற்புள்ளது.

(Visited 23 times, 1 visits today)
2+
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close