இந்தியாசெய்திகள்

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% சுங்க வரி விதிப்பு

புதுடெல்லி: புல்வாமா தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என்பது இந்தியர்கள் அனைவரும் அறிந்த விஷயம். மேலும் இந்தத் தாக்குதுதலைத் தொடுத்த அமைப்பின் அதளைவனே பாகிஸ்தானில் உள்ளான். இந்தத் தீவிரவாதத் தாக்குதலை அடுத்து இரு தினங்களுக்கு முன்னரே இந்தியா, பாகிஸ்தானை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து விலக்கியது. மேலும் நேசத்திற்குரிய நாடுகள் பட்டியலிலும் கிடையாது என்று அறிவித்தது.

 

சனிக்கிழமை அன்று அடுத்தக் கட்டமாக பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 200% வரி விதித்துள்ளது இந்திய அரசு. இது ஏறத்தாழ தடை செய்ததற்கு சமம் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

 

2017-18 ல் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 3,482.3 கோடி ஆகும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் முக்கியமானது பழங்களும், சிமெண்ட்டும் உள்ளது. அதனுடைய தற்போதைய வரி முறையே 30-50%, 7.5% ஆகும்.

 

இந்திய அரசு பாகிஸ்தானை உலக அரங்கில்  தனிமைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

(Visited 13 times, 1 visits today)
1+
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close