உலகம்

ப.சிதம்பரத்தின் மீது உச்சநீதிமன்றத்தில் புகார்

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவரும் பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவருமான திரு. ப.சிதம்பரத்தின் மீதும் அவரது மனைவியும் மூத்த வழக்கறிஞரும் சாரதா சின்ஃபண்ட் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவருமான திருமதி.நளினி சிதம்பரத்தின் மீதும் நேற்று மூத்த பத்திரிகையாளர் கோபிகிருஷ்ணன் புகார் அளித்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்ட அந்தப் புகாரில் “சிதம்பரம் தம்பதி மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் ஊழல் விசாரணைக்காக நீதிமன்றங்களில் ஆஜராகும் போது மூத்த வழக்கறிஞர்களுக்கான உடையில் வருகின்றனர்.

இவர்கள் ஊழல் குற்ற விசாரணைக்கு வரும்போது மூத்த வழக்கறிஞர்களுக்கான உடையில் வருவது நேர்மையான வழக்கறிஞர்களை அவமதிப்பதாக உள்ளது. மேலும் குற்றவாளிக்கூண்டில் வழக்கறிஞர் உடையில் நின்று இவர்கள் விசாரணையை எதிர்கொள்வது வழக்கறிஞர் தொழிலின் கௌரவத்துக்கு இழுக்காக உள்ளது.

ஆகவே கணவன், மனைவி இருவருக்கும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பட்டத்தை வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிடவேண்டும். அதோடு வழக்கறிஞர் உடையில் விசாரணைக் கைதிகள் நீதிமன்றம் வரவும் தடைவிதிக்க வேண்டும்” என்று புகாரில் கோபிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தை கோபிகிருஷ்ணன் தனது டிவிட்டர் தளத்திலும் பகிர்ந்துள்ளார்.

(Visited 33 times, 1 visits today)
1+
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close