Admin

மறக்கடிக்கப்பட்ட மாவீரன் படுகேஸ்வர் தத் – நினைவுநாள் ஜூலை 20

பாரதநாட்டின் சுதந்திரம் என்பது எதோ ஒரு சில தனிமனிதர்களின் முயற்சியாலோ அல்லது சில குடும்பங்களின் தியாகத்தாலோ மட்டுமே கிடைத்துவிடவில்லை. ஆயிரம் ஆயிரம் தியாகிகளின் குருதியால், அவர்களின் விடாத முயற்சியால், அவர்களின் பலிதியாகத்தால் கிடைத்த விடுதலை இது. தெளிவாக திட்டம் போட்டு அப்படிப்பட்ட தியாகிகள் இந்த மண்ணில் மறக்கடிக்கப் பட்டனர். அதனால்தான் தேசபக்தியை இல்லாத மூன்று தலைமுறைகளை நாம் உருவாக்கி உள்ளோம். அப்படி வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறக்கடிக்கப்பட்ட ஒரு மாவீரனின் நினைவுநாள் இன்று. எந்த ஒரு பாரதியரும் […]

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட தினம் – ஜூலை 19

பாரத நாட்டில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டு இன்று. 1969ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாம் அரசு 14 பெரும் வங்கிகளை தேசியமயமாகியது. அரசாங்கம் ஒரு முன்னெடுப்பைச் செய்கிறது என்றால் அதன்பின் உள்ள சமூக, பொருளாதார காரணிகளை மட்டுமல்லாது அரசியல் பின்புலத்தையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பதினேழு ஆண்டுகள் பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு 1964ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரை அடுத்து பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி 1966ஆம் ஆண்டு […]

மைசூரின் கடைசி மஹாராஜா ஜெயசாம்ராஜேந்திர உடையார் – பிறந்தநாள் ஜூலை 18

மைசூர் சமஸ்தானத்தின் இருபத்தி ஐந்தாவது மஹாராஜாவும் ஏறத்தாழ ஐந்தரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பரம்பரையின் கடைசி வாரிசாகவும் இருந்த மஹாராஜா ஜெயசாம்ராஜேந்திர உடையாரின் பிறந்தநாள் இன்று. மைசூரின் மன்னராக இருந்த நாலாம் கிருஷ்ணராஜ உடையாரின் சகோதரர் இளவரசர் நரசிம்மராஜஉடையார். இளவரசர் நரசிம்மராஜ உடையாரின் மகனாகப் பிறந்தவர் ஜெயசாம்ராஜேந்திர உடையார். தந்தை இறந்ததால் இவர் இளவரசனாக நியமிக்கப்பட்டார். மஹாராஜா கிருஷ்ணராஜ உடையாரின் மறைவுக்குப் பிறகு ஜெயசாம்ராஜேந்திர உடையார் மைசூர் சமஸ்தானத்தின் மன்னராக 1940ஆம் ஆண்டு பட்டம் சூட்டப்பட்டார். […]

விடுதலைப் போராட்ட வீராங்கனை அருணா ஆசப் அலி பிறந்தநாள் ஜூலை 16

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் நாள், பம்பாய் நகரத்தில் கூடிய காங்கிரஸ் மாநாடு வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. எல்லா முன்னணித் தலைவர்களையும் உடனடியாக பிரிட்டிஷ் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அடுத்த நாள் கூட்டத்திற்கு 32 வயதே ஆன ஒரு இளம் பெண் தலைமை வகித்தார். மாநாட்டில் அன்று காங்கிரஸ் கொடியை அவர் ஏற்றினார். பாரத நாட்டின் மிகப் பெரும் போராட்டம் தொடங்கியது. கூட்டத்தில் புகுந்து வெள்ளையர்களின் காவல்துறை கண்முடித்தனமாக […]

தொழிலதிபர் சிவநாடார் பிறந்தநாள் – ஜூலை 14

கணினி மென்பொருள்துறையில் முக்கிய நிறுவனமான HCL நிறுவன அதிபரான திரு சிவ நாடார் அவர்களின் பிறந்தநாள் இன்று. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரின் அருகே உள்ள மூலைப்பொழி என்ற கிராமத்தைச் சார்ந்தவர் திரு சிவநாடார். இவரது தந்தை சிவசுப்பிரமணிய நாடார் தாயார் வாமசுந்தரிதேவி. இவர் தாய்வழி தாத்தா வழக்கறிஞர் சிவந்தி ஆதித்தன், இவரது தாய் மாமன் தினத்தந்தி பத்திரிகை நிறுவனர் திரு சி பா ஆதித்தனார். தனது தொடக்க கல்வியை கும்பகோணம் நகரிலும், பின்னர் மதுரையிலும் […]

திருமணத்தைப் பற்றி(யும் பற்றாமலும்)

புகழ்பெற்ற கர்நாடக சங்கீத கலைஞர் ஒருவரின் மகள் திருமணம் பற்றிய விவாதம் பற்றி எரிகிறது, சரி என்றும் தவறென்றும் பல்வேறு மக்கள் காரசாரமாக விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதிலும் விவாதிப்பவர்கள் பலர் நெருங்கிய நண்பர்கள், அறிவு முதிர்ச்சியும் கூர்த்த மதியும் ஆதாரங்களை அடுக்குவதிலும் வல்லவர்கள். அவரவர் பார்வையில், அவரவர் கோணத்தில் அவர்கள் கருத்து சரிதான். ஆனால் அதுவே போதுமானதா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டிதானே உள்ளது. நண்பர்களே, யாரையும் கேள்வி கேட்பதற்காகவோ அல்லது குற்றம் கண்டுபிடிப்பதற்காகவோ இதை […]

மாவீரன் அழகுமுத்துக் கோன்” கொடூரன் மருதநாயகம் என்ற யூசுப்கானால் கொடூரமாக கொல்லபட்ட நாள் இன்று…

ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதல் சுதந்திர போராளி “மாவீரன் அழகுமுத்துக் கோன்” கொடூரன் மருதநாயகம் என்ற யூசுப்கானால் கொடூரமாக கொல்லபட்ட நாள் இன்று… அழகுமுத்துகோன் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் பிறந்தார். தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன்(அழகுமுத்து என்பது இவர்களது குடும்பப்பெயர் பல தலைமுறைக்கு முன்பிருந்து தற்போதுவரை இப்பெயர் உள்ளது) தாய் அழகுமுத்தம்மாள். அவர் எட்டயபுரம் பாளையத்தில் படைத்தளபதியாக பணியாற்றினார்.. 1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார். 1728-ம் ஆண்டு நமது விடுதலை வீரர் வீர […]

முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு பிறந்தநாள் – ஜூலை 11

வாஜ்பாய் மற்றும் மோதி அமைச்சரவைகளில் அமைச்சராகப் பதவி வகித்த திரு சுரேஷ் பிரபு அவர்களின் பிறந்தநாள் இன்று. மஹாராஷ்டிர மாநிலத்தைச் சார்ந்த சுரேஷ் பிரபு ஒரு பட்டயக் கணக்காளரும், வழக்கறிஞருமாவார். மஹாராஷ்டிர மாநிலத்தின் ராஜாபூர் தொகுதியில் இருந்து 1996 முதல் 2009 வரை இவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ராஜ்யசபை உறுப்பினராக உள்ளார். தனது அரசியல் வாழ்க்கையை சிவசேனா கட்சியில் தொடங்கிய பிரபு, தற்போது பாஜகவில் உள்ளார். வாஜ்பாய் அரசில் சுற்றுப்புறத்துறை, உரத்துறை, மின்சாரத்துறை, கனரக தொழில்துறை […]

உளவுத்துரைகளைக் காட்டிக்கொடுத்த அன்சாரி துரை – 1

பிரகாஷ் ராமசாமி அவர்களின் முகநூல் பதிவு. ரா உளவுத்துறை. ============ முதல்ல உளவுத்துறை ஆபீஸர்கள் எல்லோரும் நம்ம வடிவேலு.. ஒசாமாட்ட பேசுறியா அதிகாரி மாதிரி இருக்க மாட்டார்கள். வத்தலாக அல்லது.. மிகவும் சாதாரண மனிதர்களாகத்தான் இருப்பார்கள். போலீஸ் கட், நல்ல பைசப்ஸ்.. இப்படி இருந்தா சாதாரண ஆசாமிக்கும், அசாதாரணமான சந்தேகம் வரும். இந்த ஹமீத் அன்சாரி பற்றி முதன் முதல்ல.. சொன்னது R K யாதவ் என்கிற RAW அதிகாரி. அவர் பொஸ்தகத்துல நிறைய மேட்டர் இருக்கு. […]

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பிறந்தநாள் – ஜூலை 10.

பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் தற்போதய மத்திய ராணுவ அமைச்சருமான ராஜ்நாத்சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று. உத்திரப்பிரதேசத்தைச் சார்ந்த ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் 1951ஆம் ஆண்டு பிறந்தவர் ராஜ்நாத்சிங். இயற்பியல் துறையில் முதுகலைப் பட்டத்தை கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் பெற்ற இவர் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றிவந்தார். தனது 13ஆம் வயதிலேயே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ராஜ்நாத், 1974ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தின் மிர்சாபூர் நகரின் செயலாளராகவும் இருந்தார்.  அடுத்த ஆண்டே மாவட்ட தலைவராகவும் […]