நெல்லைக்காரன்

லோக்சபா தேர்தல் : திருவள்ளூர் தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?

வரும் மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் அதிமுகவும் காங்கிரசும் பலப்பரிட்சை மேற்கொள்கின்றன. அதிமுக சார்பாக சு.வேணுகோபால் போட்டியிடுகிறார். வேணுகோபால் 2009 லிருந்து திருவள்ளூர் தொகுதியில் எம்பி யாக செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே மக்களுக்கு மிகவும் பரிட்சயமானவர் என்பது இவருக்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக  கே.ஜெயக்குமார் என்பவர் களம் இறங்குகிறார். கடந்த 2014 தேர்தலில் திமுக விசிக கூட்டணியில் விசிகவின் ரவிக்குமார் களம் கண்டார்.   2014 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதி. […]

கிரிஸ் கெயில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

50 ஓவா் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மேற்கு இந்திய தீவுகள் அணி வீரா் கிறிஸ் கெயில் அறிவித்துள்ளாா். இதுவரை ஒருநாள் போட்டிகளில் 1 இரட்டைசதம், 23 ஒருநாள் சதம்  , 49 அரை சதங்களை விளாசியுள்ளார். மேலும் 9727 ரன்களை அவர் கலந்து கொண்ட 284 போட்டிகளில் எடுத்துள்ளார். அவர் தான் மேற்கு இந்திய தீவு அணியில் ஒருநாள் போட்டியில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். ஐபிஎல் […]

89 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்

சென்னை : தமிழக தலைமை டிஜிபி ராஜேந்திரன் சென்னையில் 2 உதவி ஆணையர்கள் உட்பட 89 டிஎஸ்பி.,க்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் 16 ஏடிஎஸ்பி.,க்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 1+

நான்கு ராணுவ வீரர்கள் வீரமரணம்; பயங்கரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச் சூடு

காஷ்மீர்: காஷ்மீரில்  பயங்கரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர்களை குறிவைத்து சுட்டுள்ளனர். இதில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். பிங்லான் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்துள்ளனர். பதிலடிக்கு இந்திய வீரர்களும் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில்  பயங்கரவாதிகள் சுட்டதில் ஒரு மேஜர் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பொதுமக்கள் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 4 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் ஒரு […]

புல்வாமா குண்டு வெடிப்பு சி.சி.டி.வி. வீடியோவில் உண்மையில்லை – பூம் லைவ் விளக்கம்

புல்வாமா தாக்குதலின் போது அங்கு பதிவான சி.சி.டி.வி காட்சி ஈராக் குண்டு வெடிப்பின் போது பதிவான சி.சி.டி.வி காட்சி என ‘பூம் லைவ்’ எனப்படும் ‘ஃபேக்ட் செக்கிங்’ தளம் கண்டறிந்துள்ளது. ஆனால் சமூக வலைத்தளத்தில் இதைத் தான் புல்வாமா குண்டுவெடிப்பு என் பலரும் அறியாமல் பகிர்ந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. சாலையோரம் கான்வாய் வாகனங்கள் செல்கையில் பதிவான அந்த சி.சி.டி.வி வீடியோ 30 நொடிகளைக் கொண்டுள்ளது. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வரும் […]

கமல் பலசரக்குக் கடை வைக்கக் கூடத் தகுதியில்லாதவர்; விஜயகாந்த் நலம்பெற்று அரசியலுக்கு வரவேண்டும்-ராஜேந்திர பாலாஜி

நேற்று திருவண்ணாமலையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ராஜேந்திர பாலாஜி கமல் குறித்த கேள்விக்கு பதில் சொல்கையில் ‘அரசைக் குறை சொல்லும் அருகதை  கமலுக்குக் கிடையாது என்றும், கமல்ஹாசன் பலசரக்குக் கடை நடத்துவதற்குக் கூடத் திறமை இல்லாதவர்’ என்றும் கூறினார். மேலும் ரஜினிகாந்த் பற்றி தெரிவிக்கையில்,  அவருக்கு வயதாகிவிட்டதால் அரசியல் சரிபட்டு வராது என்று தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதே நேரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல உடல் நலம் பெற்று அரசியலுக்கு திரும்ப வேண்டும் என […]

உலக அரங்கை அதிர வைத்த தமிழ் சிறுவன் லிடியன்; என்ன வேகமாக பியானோ வாசிக்கிறான் பாருங்க…

அமெரிக்காவில்  ‘தி வேர்ல்ட் பெஸ்ட்’ என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவனும் கலந்து கொண்டான். இந்த சிறுவன் 1900ம் ஆண்டு வெளிவந்த பிளைட் ஆப் தி பம்பிள்பி (Flight of the bumblebee) என்ற இசையை பியானோவில் வாசிக்கத் தொடங்கினார். ஒட்டு மொத்த அரங்கையும் தனது அதிவேக பியானோ வாசிப்பின் மூலம் கவனத்தையும் பாராட்டையும் பெற்றான். பியானோ இசைக்கருவியை வேகமாக வாசித்து […]

ஸ்டெர்லைட் வழக்கில் இன்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகள் சார்ந்த  அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், இன்று (பிப்.18) உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. தூத்துக்குடி சிப்காட் பகுதியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்திருக்கிறது. கடந்த 1996-ம் ஆண்டு முதல் இந்த ஆலை இயங்கி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100 நாட்கள் போராட்டம் அமைதியாக நடந்து வந்தது. அரசும் 100 நாட்கள் நடந்த போராட்டங்களை ஒடுக்கவில்லை. இந்த நிலையில் மே 22 அன்று மாபெரும் ஊர்வலத்தை […]

உலகக் கோப்பை கிரிக்கெட் ; இந்தியா பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதுமா?

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 க்கும் அதிகமான வீரர்கள் உயிர் இழந்துள்ளனர். இதனால்  இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு அனைத்து இடங்களில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் வந்த வண்ணம் உள்ளன. மக்கள் மிகவும் கொந்தளித்துப் போய் உள்ளனர். இந்த நிலையில் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரானது மே 30 முதல் ஜுலை 14 வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் ஜூலை 16 ஆம் தேதி அட்டவணைப்படி இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்க […]

சவுதி அரேபியா இளவரசர் பாகிஸ்தான் வருகை

சவுதி அரேபியா இளவரசர் முகம்மது பின் சல்மான் இரண்டு நாட்கள் பயணமாக பாகிஸ்தான் வந்துள்ளார். முகம்மது பின் சல்மானை  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஆர்மி  ஜெனரல் காமர் இருவரும் வரவேற்றனர். விமான நிலையம் வந்து சேர்ந்த இளவரசருக்கு  சிவப்புக் கம்பள விரிக்கை போட்டு வரவேற்பும் 21 குண்டுகள் பொழிந்து மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பல மில்லயன் டாலர்களுக்கான வணிக ஒப்பந்தம் செய்யவே சவுதி அரேபியா இளவரசர் வருகை தந்துள்ளார். இதன் பிறகு இந்தியா, சீனா […]