அருண் பிரபு

மே 6 – உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுப்பாராவ் நினைவுதினம்

பாரத நாட்டில் நீதிமான்கள் பலர் தேசத்துக்குச் சிறப்புச் சேர்த்துள்ளனர். அந்த வரிசையில் இந்தியாவின் ஒன்பதாவது தலைமை நீதிபதியாக மிளிர்ந்தவர் கோகா சுப்பாராவ். ஆந்திராவில் ராஜமுந்திரியில் 15 ஜூலை 1902 பிறந்தார். இவரது தந்தை ஒரு வக்கீல். சுப்பா ராவ் அரசு கலைக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தார். அதன் பிறகு அவரது மாமனார் பி.வெங்கட்ராம ராவ் நாயுடுவின் அலுவலகத்தில் வக்கீலாகச் சேர்ந்தார். அது ஆந்திர கேசரி பிரகாசம் பந்துலுவின் அலுவலகம். […]

ஏப்ரல் 30 – பாடகி ஹரிணி பிறந்ததினம்

தமிழ்த்திரை இசையில் பின்னணிப் பாடல் முக்கிய இடம் வகிக்கிறது. பல திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு இசையும் பாடல்களுமே காரணமாக இருந்துள்ளன. அந்த வகையில் திரைத்துரையில் பின்னணிப்பாடல் முக்கிய இடம் வகிக்கிறது. பின்னணிப் பாடகர்கள் பாடகிகள் என்ற வரிசையில் தவிர்க்க இயலாத இடம் பிடித்தவர் ஹரிணி.   1979 ஏப்ரல் 30 அன்று சென்னையில் பிறந்த இவர், நான்கு வயது முதல் திருமதி.கௌரி என்ற பாடகியிடமும், பின்னர் எம்.எஸ்.அவர்களின் மகள் திருமதி ராதா விஸ்வநாதனிடமும் கர்நாடக சங்கீதத்தை முறைப்படி […]

ஏப்ரல் 15 – விமானப்படைத் தலைவர் MIAFஅர்ஜன்சிங் பிறந்ததினம்

இந்திய விமானப்படை வரலாற்றில் கொண்டாடப்பட வேண்டிய வீரத்திருமகன்கள் பலர் உள்ளனர். அவர்களில் தலைசிறந்த ஒருவர் அர்ஜன் சிங். போர் விமானியாக, விமானிகளின் தலைவராக, விமானப்படையின் தளபதியாக, அயல்நாட்டுத் தூதராக, ஆளுநராக, ஆலோசகராக அவர் நாட்டுக்குச் செய்த சேவை அளப்பரியது. 1919, ஏப்ரல் 15 அன்று பஞ்சாபில் லியால்பூர் (தற்போது பாகிஸ்தானில் ஃபைசலாபாத்) என்ற ஊரில் பிறந்தார். இவரது குடும்பம் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த போதும் நான்கு தலைமுறைகளாக ராணுவத்தில் பணியாற்றிய வீரர்கள் குடும்பம். இவரது கொள்ளுத்தாத்தா சுல்தானா சிங் […]

ஏப்ரல் 11 – ச்ருங்கேரி சாரதா பீடாதிபதி ஸ்ரீ மஹாஸந்நிதானம் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் வர்தந்த்தி – பிறந்த தினம்

நம் நாட்டின் தொல்லறம் (சநாதன தர்மம் என்று ஸம்ஸ்க்ருதத்தில் அழைக்கப்படுவது) எப்போதெல்லாம் சோதனைக்குள்ளாகிறதோ அப்போதெல்லாம் இறைவன் ஏதோவொரு வடிவில் அறத்தை மீட்டு நிலை நாட்ட வழி செய்வான் என்பது வேத வாக்கு. இதையே கீதையில் கண்ணன் வலியுறுத்தினான. அப்படி சூனியவாதம் தலையெடுத்து நம் அறத்தை அழிவின் பாதையில் செலுத்த முயன்ற காலத்தில் அவதரித்தவர் ஆதிசங்கர பகவத் பாதர். இவரது காலத்தில் சூனிய வாதிகளான பௌத்தர்கள், சமணர்களை வாதத்தில் வென்று, நம் அறத்திலேயே மீமாம்சகர்கள் என்பாரையும் தன் அத்வைத […]

ஏப்ரல் 3 – ஃபீல்டு மார்ஷல் மானெக்‌ஷா பிறந்ததினம்

நாட்டுக்காக உயிரைத் துச்சமாக மதித்து எல்லையிலும் உள்நாட்டில் பேரிடர்களின் போதும் களமிறங்குபவர்கள் ராணுவத்தினரே. அவர்களில் தலைமைப் பொறுப்புக்கு வந்து பெரும் போர்களை வெற்றிகரமாக நடத்தியவர்கள் குறிப்பிடத்தக்க சிலரே. அவர்களில் ஒருவர் ஃபீல்டு மார்ஷல் சாம் மானெக்‌ஷா. கூர்க்கா ரெஜிமெண்டைச் சேர்ந்த இவர் தன் வீரர்களால் சாம் பஹாதூர் என்று அழைக்கப்பட்டார். 1914, ஏப்ரல் 3ஆம் நாள் அமிர்தசரஸில் கேப்டன் டாக்டர் ஹோமஸ்ஜி மானெக்‌ஷாவுக்கும் ஹில்லா மானெக்‌ஷாவுக்கும் மகனாகப் பிறந்தார்.  இவரது தந்தை முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் […]

ஏப்ரல் 2 – விடுதலைப் போராட்ட வீரர் வவேசு ஐயர் பிறந்ததினம்

நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் வரிசையில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் வராகநேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் என்கிற வவேசு ஐயர். வஉசி, பாரதியார் உள்ளிட்டோருடன் சேர்ந்து நாட்டு விடுதலைக்காகவும் சமுதாய சீர்திருத்தத்துக்காகவும் பாடுபட்டார். 1881 ஏப்ரல் 2ஆம் நாள் திருச்சிக்கு அருகில் உள்ள வராஹநேரியில் பிறந்தார் சுப்பிரமணியம். ஆரம்பக் கல்வி முடித்த பிறகு திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் அரசியல், வரலாறு, லத்தீன் ஆகியவற்றில் சிறப்புத் தேர்ச்சியுடன் பிஏ பட்டம் பெற்றார். சட்டம் படித்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிளீடராகத் […]

ஆட்டம் காண்கிறது அமேதி வாய்ப்பு – வயனாட்டில் ராகுல் போட்டி?

பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ராகுல் காந்தி அமேதியை விட்டு விலகி கேரளா வயநாட்டில் போட்டியிடுவதே நல்லது என்று வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மஜீத் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டைம்ஸ் நவ் செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள விடியோவில் மஜீத் இப்படி சொல்லியிருக்கிறார். அமேதி பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி, குறிப்பாக நேரு குடும்ப வாரிசுகள் வெற்றி பெற்று வந்த தொகுதி. அவர்கள் போட்டி போடாத நிலையில் 1998ல் […]

27-03-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்.

                                                                                                                இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு: விளம்பி வருஷம் பங்குனி மாதம் 13ஆம் தேதி மார்ச் 27ஆம் தேதி புதன்கிழமை. ஸப்தமி திதி  மறுநாள் அதிகாலை 1.42 வரை,  கேட்டை நக்ஷத்திரம் புதன் மதியம் 12.57 வரை பிறகு மூலம் . ராகு காலம்: மதியம் 12.00 முதல் 1.30 வரை எமகண்டம்: காலை  7.30   முதல் 9.00 வரை நல்ல நேரம் : காலை: 9.30 – 10.30 மாலை 4.30 – 5.30 சூலம்: வடக்கு ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கான […]

மார்ச் 25 – கர்னல் வசந்த் வேணுகோபால் பிறந்ததினம்

போர்க்காலத்திலும் அமைதிக்காலத்திலும் ராணுவச் செயல்பாடு போர்க்காலம் போலவே இருக்கும் இரு நாடுகள் உலகில் உள்ளன. ஒன்று பாரதம், மற்றொன்று இஸ்ரேல். இரு நாடுகள் மீதுமே சுற்றியுள்ள நாடுகள் பகைமையை நேரடியாகவோ மறைமுகமாகவோ கொண்டுள்ளன. உயிரிழப்புகள் அமைதிக்காலத்து ராணுவ நடவடிக்கைகளில் இவ்விரு நாடுகளில் அதிகம். அந்த வகையில் நம் நாட்டுக்காக கஷ்மீரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளைத் தடுத்து நிறுத்தி உயிர்த்தியாகம் செய்த கர்னல் வசந்த் வேணுகோபால் பிறந்ததினம் இன்று. 1967, மார்ச் 25 அன்று பெங்களுரில் பிறந்தார் வசந்த். அவரது […]

மார்ச் 24 – ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் பிறந்ததினம்

தமிழகத்தில் பிறந்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் முத்துஸ்வாமி தீக்ஷிதர். இவரது பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை. இசை நுணுக்கங்கள் நிறைந்த அமைப்பைக் கொண்டவை. தமிழ், மலையாளம், ஸம்ஸ்க்ருதம் ஆகிய மொழிகளைக் கொண்டு இவர் தமிழகத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் அருள்பாலிக்கும் தெய்வங்களைக் குறித்துப் பெரும்பான்மையான பாடல்களை இயற்றியுள்ளார். திருத்தணியில் இவர் குடியிருந்தபோது ஒரு நாள் முருகப் பெருமான் இவருக்குக் காட்சியருளி இவரது நாவில் ஒரு வெல்லக்கட்டியை வைத்து பாடச் சொன்னார் என்பதும் அன்றிலிருந்து முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடத் தொடங்கினார் என்பதும் […]