தமிழ் நேசன்

மீண்டும் உளறிய ராகுல் – நாங்கள் ஏற்படுத்திய பிரச்சினையை மோடி தீர்ககவில்லை

ஹரியாணா மாநிலம் பிவானி என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார் ராகுல் காந்தி. அங்கே பேசும் போது வழக்கம் போல உளறினார். 2014ல் ஊழல், வேலையின்மை, விவசாயிகள் பிரச்சனை இவற்றை சரி செய்ய நரேந்திர மோதி தேர்தெடுக்கப்பட்டார் என்று பேசினார். ராகுல் பேசியதாவது: “2014ல் தனது பெரும் பிரச்சனைகளான வேலையின்மை, விவசாயிகள் பிரச்சனை, ஊழல் இவற்றோடு சண்டை போட்டு சரி செய்ய நரேந்திர மோதி என்ற குத்துச்சண்டை வீரரை தேர்ந்தெடுத்தது. அவர் தன் பயிற்சியாளர் […]

ரஃபேல் விவகாரத்தில் பொய் சொல்லிவிட்டேன் – கோர்டில் ராகுல் மன்னிப்பு

ரஃபேல் விமானம் வாங்கும் விவகாரத்தில் பிரதமர் மோடி ஊழல் செய்தார் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது சௌக்கிதார் சோர் ஹை என்று மோடியை உச்சநீதிமன்றம் திருடன் என்று சொன்னதாக பேசினார். ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பரில் ஊழல் நடப்பதாக ஆதாரமில்லை என்று சொல்லிவிட்டது. பின்னர் காங்கிரஸ் சார்பில் மறு சீராய்வு மனு போட்டனர். அதை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இதை வைத்துக்கொண்டு பேசிவரும் […]

RGக்கு ஐம்பது கோடி – காங்கிரஸின் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம்

மத்திய அரசின் அமலாக்கத்துறை தன் விசாரணையில் உள்ள ஆகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கிறிஸ்டியன் மிஷல் என்ற ஆயுத பேர் தரகரை பிடித்து விசாரித்து  வருகிறது. கடந்த வியாழனன்று தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  இடைக்கால குற்றப்பத்திரிகையில் சில அதிரடி தகவல்கள் இடம் பெற்றன. கிறிஸ்டியன் மிஷல் கொடுத்த தகவல் அடிப்படையில் திருமதி. காந்தி என்பவருக்கு ஊழலில் தொடர்பிருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. இந்திலையில் வேறு சில தரகர்களின் பெயரை மிஷல் சொன்னதன் பேரில் அவர்களிடம் விசாரணை நடந்து […]

நடுநிலையாளர்களின் அமைப்பு – 2014க்கு முன்னும் பின்னும்

சௌகிதார் நந்தினி (@_NAN_DINI) என்பவரது ட்விட்டர் பதிவு: மானே தேனே பொன்மானே ஆங்காங்கே சேர்த்தது தமிழ்நேசன் நடுநிலையாளர்களின் அமைப்பு – 2014க்கு முன் வர்க்கம் – சிறப்புரிமை பெற்றது மொழி – ஆங்கிலம் (தாய் மொழி எதுவானாலும்) மதம் – சௌகரியமான நாத்திகம் (கிரகப் பிரவேசம், திருமணம், காதுகுத்து, இறுதிச்சடங்குகள் தவிர) பண்டிகைகள் – ஈத், ஈஸ்டர், கிறிஸ்துமஸ், தீபாவளி, ஹோலி, பொங்கல், புத்தாண்டு (ஜனவரி 1) உணவுப் பழக்கம் – ரகசியம் தனிப்பட்ட எண்ணவோட்டம் – வீரமணி […]

கும்பிடத் தோன்றும்-கூப்பிடத் தோன்றும்: நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு – திமுகவில் இருந்து ராதாரவிக்கு கல்தா

சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பபட விழாவில் நடிகர் ராதாரவி நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். ஐரா என்ற திரைப்படத்தின் விழா ஒன்றில் பேசிய ராதாரவி நயன்தாரா இத்தனை ஆண்டுகள் திரைத்துறையில் நிலைத்து நின்று நடித்து வருவதை பாராட்டினார். பல மாற்றங்களை மீறி நயன்தாரா நடித்து வருவது சிறப்பு என்றார். பிறகு நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் என்று பேசினார். “முன்பெல்லாம் கடவுள் வேடம் என்றால் கே.ஆர்.விஜயாவைத்தான் தேடுவார்கள். பார்த்தவுடன் கும்பிடத் தோன்றும். இப்போது […]

தின்ற பிரியாணிக்கு காசு தராமல் திமுகவினர் அடிதடி – இது சமீபத்திய சம்பவம்

சென்னை வேளச்சேரி, காந்தி நகரைச் சேர்ந்தவர் அப்துல்லா. அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு  பகுதியைச் சேர்ந்த மேகநாதன், தமிழ்செல்வன் ஆகியோர் இவரது கடைக்கு வந்துள்ளனர். குடிபோதையில் இருந்த இருவரும் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டதற்கு கடையின் உரிமையாளர் அப்துல்லா பணம் கேட்டார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மேகநாதன், ”நான் இந்த ஏரியா திமுக நிர்வாகி, என்னிடமே பணம் கேட்கிறாயா” என்று மிரட்டினார். வாக்குவாதம் வலுத்த நிலையில் மேகநாதன் அப்துல்லாவை தாக்கியுள்ளார். அவர் […]

பொள்ளாச்சி பலாத்கார விவகாரம் – ஸ்டாலின் மருமகன் மீது வழக்கு

பொள்ளாச்சி பாலியல் பலாதகார வழக்கில் புதிய திருப்பமாக திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் மீது வதந்தி  பரப்பியதாக சென்னை போலீஸ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் பலாதகார வழக்கில் புகார் கொடுக்கத்தயங்கி பலரும் தவித்த நிலையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலையிட்டு வழக்குப் பதிந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது முதல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஆனால் உண்மைக்கு […]

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் – அச்சம் வேண்டாம் அரசு அறிவிப்பு

அந்தமான் தீவுகளில் இன்று காலை 6.45 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவையில் 4.80 ஆக பதிவானது. இதனால் எந்த உயிர்ச்சேதமோ பொருள் சேதமோ ஏற்படவில்லை என்றும் 95 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நடுக்கம் உணரப்பட்டது என்றும் இந்திய வானவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் இந்திய வானவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1+

சீந்தவில்லை காங்கிரஸ் – சீறுகிறார் சித்து

நவ்ஜோத் சிங் சித்து பிரபல கிரிக்கெட் வீரர். இந்திய அணிக்காக உலகக் கோப்பை உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகள் உள்பட பல போட்டிகளில் விளையாடியவர். கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டு வந்தார். பின்னர் அரசியலில் குதித்தார். பாஜகவில் சேர்ந்து எம்பி ஆகி சில ஆண்டுகள் கழித்து ஆம் ஆத்மி கட்சியில் பேச்சுவார்த்தை நடத்தி, தனிக்கட்சி தொடங்கி பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். காங்கிரசில் எம்எல்ஏ ஆகி பஞ்சாப் மாநில மந்திரி ஆனார். பஞ்சாப் முதல்வர் […]

பஞ்ச பூதங்களில் ஊழல் செய்து தங்க மெடல் வாங்கிய குடும்பம் – திமுக மீது தினகரன் பாய்ச்சல்

பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்து லஞ்ச லாவண்யங்களில் தங்க மெடல் வாங்கிய குடும்பம் யாருடைய குடும்பம் என்பதையும் தமிழ் நாட்டு மக்கள் அறிவார்கள் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினரகன், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குற்றவாளிகளால் நடத்தப்படும் அரசு’ என்று குற்றவாளிக் கூடாரத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். விஞ்ஞானத் திருடர்கள் என்று அப்போதைய நீதியரசர் சர்க்காரியாவால் விளிக்கப்பட்டவர்கள் யார் […]