ஹரன் பிரசன்னா

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு – ஹரன் பிரசன்னா

நடப்பாண்டிலேயே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்ற அறிவிப்பை சூசகமாக வெளியிட்டதற்கே இத்தனை எதிர்ப்புகள். ஆனால் இதற்கான ஆயத்தம் முன்பிருந்தே நடந்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டிலேயே, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மத்திய அரசு சிபிஎஸ்ஸி பள்ளிகளுக்கு இதைப் போன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதை ஒட்டி மாநில அரசுகளுக்கும் பரிந்துரைத்தது என்று நினைக்கிறேன். அப்போதிருந்தே இது நிகழலாம் என்றிருந்த நிலையில் நேற்று செங்கோட்டையன் இந்த ஆண்டிலிருந்தே இத்தேர்வுகள் நிகழும் வாய்ப்பு உள்ளது என்றும், இதுகுறித்து […]

டூலெட்: வாடகை உலகம் – ஹரன் பிரசன்னா

செழியனின் திரைப்படம். எவ்வித அலங்காரமும் ஆடம்பரமும் இல்லாமல் இயல்பான மொழியில் பிரச்சினையை மட்டும் பேசும் செறிவான ஒரு திரைப்படம். சென்னைக்கு மட்டுமல்ல, இந்தியா முழுக்க இருக்கும் பெரும்பாலானவர்கள் இப்படத்தில் வரும் பெரும்பாலான நிகழ்வுகளையோ அல்லது எல்லாவற்றையுமோ எதிர்கொண்டிருப்பார்கள். இப்படத்தில் வரும் பல காட்சிகள் என் வீட்டிலேயே எனக்குத் தனிப்பட்டு நிகழ்ந்தவை. இப்படி ஒவ்வொருவரும் தன்னுடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் வகையிலான திரைப்படம் டூ லெட். படத்தின் தொடக்கத்தில் இப்படம் இதுவரை திரையிடப்பட்டிருக்கும் உலகத் திரைப்பட விழாக்களின் பட்டியலைப் பார்க்கும்போது மலைப்பாக […]

யூரி: துல்லியமான தாக்குதல் – ஹரன் பிரசன்னா

How is the Josh? Very high Sir! பாகிஸ்தானுக்குள் எல்லை கடந்துசென்று அதன் தீவிரவாதப் பகுதிகளைத் (லாஞ்ச் பேட்) தாக்கிய இந்திய ராணுவத்தின் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நம் பெருமைகளுள் ஒன்று. மோடியைப் பற்றிப் பேசினாலே, பக்தாஸ் என்றும் எல்லையில் இந்திய ராணுவம் என்றும் பகடி செய்தும், தேசப்பற்று என்ற ஒன்றைக் கிண்டலுக்கும் கேவலத்துக்கும் உரியது என்றும் ஒரு பெருங்கூட்டம் இன்று ஆக்கிவரும் நிலையில், இத்திரைப்படத்தின் தேவை முன்னெப்போதையும்விட மிக அதிகமாக இருக்கிறது. அதாவது மோடியை ஓட்டுகிறோம் […]

பேரன்பு – துயரத்துள் வாழ்தல் – ஹரன் பிரசன்னா

கத்தி மேல் நடக்க வேண்டிய ஒரு கதை. மிகக் கவனமாகவே கையாண்டிருக்கிறார் ராம். இயக்குநர் ராமின் திரைப்படங்களில் எப்படியோ தோற்றம் கொள்ளும் (அல்லது அப்படி எனக்குத் தோன்றும்) ஏதோ ஒன்றின் மீதான வெறுப்பு இத்திரைப்படத்தில் இல்லை. எனவேதான் படத்துக்கான பெயரைக் கூடப் பேரன்பு என்று வைத்துவிட்டார். ராம் திரைப்படங்களில் உள்ள பிரச்சினை யாரோ ஒருவரின் அதீத நடிப்பாக இருக்கும். தங்கமீன்கள் திரைப்படத்தில் அவரே அப்படியாக இருந்தார். அந்தத் தவறை எக்காரணம் கொண்டும் செய்துவிடக் கூடாது என்பதற்காகவே மம்முட்டியைத் […]

குரு நானக் கல்லூரியில் ஹிந்துக் குடை – ஹரன் பிரசன்னா

பத்தாவது வருட ஹிந்து ஆன்மிக – சேவை அமைப்புகளின் கண்காட்சி இந்த வருடம் வேளச்சேரியில் இருக்கும் குரு நானக் கல்லூரியில் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 400 அரங்கங்கள் இருக்கலாம். மிக பிரமாண்டமாக உள்ளது. நாம் முன்பின் கேள்விப்பட்டிராத பல அமைப்புகளை இந்தக் கண்காட்சியில் பார்க்கமுடிகிறது. அனைத்துச் சாதி அமைப்புகளின் அரங்கங்கள், அனைத்துத் தத்துவ அமைப்புகளின் அரங்கங்கள், அனைத்து மடங்களைச் சேர்ந்த அமைப்புகள் எனப் பல வகையிலான அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்பது வருடங்களுக்கு முன்பு, இரண்டாவது ஹிந்து ஆன்மிக சேவைக் […]

“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும்

இந்திய வெறுப்பும், ஹிந்து வெறுப்பும் எப்படி தமிழ் சினிமாவைப் பீடித்திருக்கிறது என்பதை நாம் தற்போது வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களிலும் பார்க்கலாம். இப்போது வெளியாகியிருக்கிறது இன்னுமொரு உதாரணம். ஆனந்தவிகடனின் நிலைய வித்வானும் ஆஸ்தான எழுத்தாளருமான ராஜு முருகன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ஜிப்ஸி திரைப்படத்தின் ஒரு பாடல் வெளியாகியிருக்கிறது. “வெரி வெரி ” என்று சரியாகவே அந்தப் பாடலை எழுதி இருக்கிறார் யுக பாரதி. பாடல் என்ற பெயரில் வாயில் வந்ததையெல்லாம் வசனமாக்கும் பாட்டும் வெரி வெரி பேட் […]