உலகம்115 Videos

கொலம்பியா பல்கலைக்கழகம் புகழாரம் -சுஸ்ருதர் உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜன்

அமெரிக்காவில் உள்ள கொலம்பியா மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவ வரலாறு தொடர்பான கட்டுரைகளை ஆராய்ந்து தொடர்ந்து எழுதி வருகிறது. அதன் சமீபத்திய கட்டுரையில் இந்திய வேதகால மருந்து முறைகளுக்கு புகழாரம் சேர்க்கும் வகையில் உலகின் முதல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் என்று கருதப்படும் சுஸ்ருதரை பற்றிய அரிய தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அக்கட்டுரையில் கிமு 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுஸ்ருதர் ஆயிரக்கணக்கான நோய்களுக்கான குறிப்பீடுகளையும் சிகிச்சை முறைகளையும் , மேலும் பல அறுவை சிகிச்சை முறைகளையும் தனது சுஸ்ருத […]

போப் அமீரகம் வருகிறார்

கத்தோலிக்க கிருத்துவர்களின் தலைவராகிய போப் பிரான்சிஸ் அமீரகம் வருகிறார். பிப்ரவரி 5ஆம் தேதி அவர் அபுதாபியில் உள்ள சயீத் விளையாட்டு நகரத்தில் உள்ள மைதானத்தில் பிரார்த்தனை நடத்துகிறார். அதன்பிறகு அவர் அமீரகத்தில் உள்ள கத்தோலிக்க கிருஸ்துவர்களிடம் உரையாடுவார். அமீரகத்தில் ஏறத்தாழ பத்துலட்சம் கிருஸ்துவர்கள் உள்ளனர். அதில் பனிரெண்டாயிரம் பேருக்கு போப்பின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை எந்த போப்பும் வளைகுடா நாடுகளுக்கு விஜயம் செய்ததில்லை. உலகின் பெரிய மதங்களின் ஒன்றின் பிரதிநிதியாகவும், உலக சமாதானத்தை […]

CREDAI கருத்தரங்கில் மோடி – ஏழைகளுக்காக NGO அமைப்பீர்

பிரதமர் மோடி நேற்று CREDAI எனப்படும் கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பின் கருத்தரங்கில் உரையாற்றினார். அவர் பேசியது பலரையும் கவர்ந்தது. புஷ்பக் படத்தில் கமலஹாசன் சத்தத்தில் தூங்குவதை பழக்கமாக்கி இருப்பார்.. அமைதியான இடத்தில் தங்கும் வாய்ப்பு கிடைக்கும் போது தூங்க சிரமப்படுவார்.. பின் அந்த சத்தத்தை டேப் செய்து அதை போட்டுக்கொண்டு தூங்குவார்.. இதை குறிப்பிட்டு மோடி அவர்கள் பேசினார். “ஏழைகள் புது வீடு கிடைத்தாலும் அதில் எப்படி வசிப்பது என்று தெரியாமல் சிரமப்படுவார்கள். அவர்கள் சிரமத்தை நாம் […]

RGக்கு ஐம்பது கோடி – காங்கிரஸின் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம்

மத்திய அரசின் அமலாக்கத்துறை தன் விசாரணையில் உள்ள ஆகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கிறிஸ்டியன் மிஷல் என்ற ஆயுத பேர் தரகரை பிடித்து விசாரித்து  வருகிறது. கடந்த வியாழனன்று தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  இடைக்கால குற்றப்பத்திரிகையில் சில அதிரடி தகவல்கள் இடம் பெற்றன. கிறிஸ்டியன் மிஷல் கொடுத்த தகவல் அடிப்படையில் திருமதி. காந்தி என்பவருக்கு ஊழலில் தொடர்பிருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. இந்திலையில் வேறு சில தரகர்களின் பெயரை மிஷல் சொன்னதன் பேரில் அவர்களிடம் விசாரணை நடந்து […]

நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தப்பித்தது

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் திருமதி தெரேசா மே அவர்கள் வெற்றி பெற்றார். அவரை ஆதரித்து 325 வாக்குகளும் எதிர்த்து 309 பதிவானது.  19 வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார் 0

ஓட்டுப்போடலைன்னா காசை திருப்பித் தா – தெலுங்கானாவில் அதிரடி

தெலுங்னாகாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் அதிருப்தியாளர் பிரபாகர் தன் மனைவி உப்பு ஹிமவதியை தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நிறுத்தினார். ஜனவரி 25 அன்று தேர்தல். அதற்கு முன்னான பிரச்சாரத்தில் பிரபாகர் ஊர் மக்களுக்கு ஓட்டுக்கு ₹500 முதல் ₹700 வரை கொடுத்து ஓட்டுக்கேட்டார். தேர்தல் முடிந்து முடிவுகள் வந்தபோது ஹிமவதி மொத்தமுள்ள 264 வாக்குளில் 24 வாக்குகள் மட்டுமே பெற்று பரிதாபமாக தோற்றார். இதில் கடுப்பான […]

2 லட்சம் பேர் இனி ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம்; இஸ்லாமியர்கள் புனித யாத்திரை எண்ணிக்கையை அதிகரிக்க செய்த மோடி; கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சல்மான்

புதுடெல்லி: நேற்று சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியாவிற்கு அரசு முறை பயணமாக வந்திருந்தார். அப்போது எரிசக்தி, உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகளுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. வணிகம் தவிர்த்தும் இரு நாடுகளுக்கிடையே சில ஒப்பந்தங்கள் நல்லெண்ண அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வர மோடி வைத்த கோரிக்கையை சல்மான் ஏற்றுக்கொண்டார். ஆகையால் இந்த ஆண்டு முதல் 2 லட்சம் பேர் மெக்காவிற்கு புனித […]

திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் பிறந்தநாள் – ஆகஸ்ட் 25

பகுத்தறிவு என்ற பெயரில் ஹிந்து மத நம்பிக்கைகளை மட்டும் இழித்தும் பழித்தும் பேசும் ஒரு கூட்டம் தமிழகத்தில் தோன்றிய போது, இசையால், இனிய தமிழால் சித்தாந்தங்களை எளிய முறையில் அனைவருக்கும் விளங்கும் வண்ணம் எடுத்துரைத்து மக்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பை தன் தோளில் சுமந்த ஒரு அறிஞரும் தோன்றினார். எண்பத்தி ஏழு ஆண்டுகள் வாழ்ந்து நாடெங்கும் சைவ சித்தாந்தத்தை விளக்கினார். தனது பேச்சுத் திறமையால் கேட்பவர் அனைவரையும் கட்டிப் போட்டார். அவர்தான் திருமுருக கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள். தமிழ்நாட்டில் வேலூர் […]

வரலாற்றில் இன்று – ஜனவரி 20 – கான் அப்துல் கபார் கான்.

அன்று இந்தியாவில் இருந்த வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில், எப்போதும் போரிடும் ஆப்கானிய வம்சாவளியைச் சார்ந்த பட்டான் இனத்தில் பிறந்து மஹாத்மா காந்தியின் சீடராக, அகிம்சை வழியில் நடந்து எல்லைக்காந்தி என்றும், ஆப்கானத்தின் பெருமை என்றும் தளபதிகளின் தலைவர்  என்று புகழ் பெட்ரா கான் அப்துல் கபார் கானின் இறந்த தினம் இன்று. 1890ஆம் ஆண்டு பிறந்த கபார் கான் தனது வாலிபப்பருவத்திலேயே பட்டான் சமுதாய முன்னேற்றத்திற்கான பணிகளைத் தொடங்கினார். மதநல்லிணக்கவாதியாகவே வாழ்ந்த கபார்கான் காந்தியின் அகிம்சை வழியைப் […]

பிப்ரவரி 9 – சதுரங்க வீரர் பரிமர்ஜன் நேகி பிறந்ததினம்

நம் நாட்டின் மிகப் பழமையான ஆனால் தற்காலத்தில் கிரிக்கெட் மோகத்தில் பேராதரவு இல்லாத விளையாட்டுக்களில் ஒன்று சதுரங்கம். இதில் நம் நாட்டில் பலர் சிறந்து விளங்குகின்றனர். அவர்களில் இளையவரான கிராண்ட் மாஸ்டர் பரிமர்ஜன் நேகி பிறந்ததினம் இன்று. பிப்ரவரி 9, 1993ல் புதுதில்லியில் பிறந்த பரிமர்ஜன் சிறு வயதில் சதுரங்க விளையாட்டில் ஆர்வம் கொண்டு விளையாடினார். பள்ளி, உள்ளூர் போட்டிகளில் விளையாடிய இவரது திறமை கண்டு இந்திய செஸ் சிறுவர் அணியில் 10 வயதுக்குக் குறைந்தோருக்கான 2002 ஆசியப் போட்டியில் […]