அகல் மின்னிதழ்12 Videos

முகப்பு

புரட்டாசி மாத அகல் மின்னிதழில் ராஜிவி நந்தகோபால் அவர்களின் “அரங்கமா நகருளானே” அ. முத்துலிங்கம் அவர்களின் “சிறுகதை – ஜகதலப்ரதாபன்” பூர்ணிமா ஸ்ரீராம் அவர்களின் “காய் கனி மகத்துவம்” ராஜ்குமார் பார்த்திபன் அவர்களின் “Cinema நூலகம்” ஜான்ஸி ராணி அவர்களின் “ஆத்ம பலம் தா… மனோ பலம் தா…” சத்யா GP யின் “ஊர் சுற்றி… போஜனம் தேடி…” பாரியன்பன் நாகராஜன் அவர்களின் “கவிதைப் பக்கம்” சந்திர சேகர் அவர்களின் “வலையின் வீச்சு” கார்த்திக் ஸ்ரீநிவாசன் அவர்களின் […]

கவர் ஸ்டோரி – பிமல் ஜலான் கமிட்டி

ரிசர்வ் வங்கி தன்னிடமுள்ள நிதியை செலவினங்களுக்குப் பிறகு நடுவண் அரசுக்கு வழங்குவது வழமையான ஒரு நடவடிக்கை. இந்த வருடமும் அதை செய்தபோது சிலரால் விமர்சிக்கப்பட்டது. இந்த வருடம் தான் முதன் முதலாக ரிசர்வ் வங்கி இது போன்ற நடவடிக்கையை எடுத்தது போல் சித்தரிக்கவும் முயற்சி நடந்தது. ரிசர்வ் வங்கி எந்த அடிப்படையில் நடுவண் அரசுக்கு வருடந்தோறும் செலவினங்கள் போக தம்மிடமுள்ள இருப்பிலிருந்து நிதியினை வழங்கி வருகிறது. இதற்கு எத்தகைய வழிமுறைகளை அது மேற்கொள்ளுகிறது என்பதையும், முந்தைய கால […]

நவராத்திரி

நவராத்திரின்னாலே அழகழகான பொம்மைங்க, கொலு படிக்கட்டு, விதவிதமான சுண்டல் வகையறா, பட்டுப் பாவாடை சட்டை போட்ட சுட்டீஸ், மத்த நாள்ல அசால்ட்டா இருந்துட்டு அந்த பத்து நாளும் அலங்காரமா அம்சமா ஜிலுஜிலுன்னு இருக்கற பாவாடை தாவணி போட்ட தேவதைகள், அம்பாளே தரையிறங்கி நடமாடற மாதிரி மாமிகள்னு தெய்வீகக் கலவையா ஒரு சீன் கண்ணு முன்னாடி வந்துட்டு போகும்.. மத்த பண்டிகையெல்லாம் விட நவராத்திரி ரொம்பவே ஸ்பெஷல்.. இதுல வீட்ல இருக்கற குட்டீஸ் மொதற்கொண்டு பாட்டீஸ் வரை ஆர்வமா […]

ரெடி 1… 2… 3… சந்திரயான்ஸ்

பாகம் 2  :  ஈர்ப்பு விசையே எரிபொருள் கடந்த மாதம் ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுடன் சந்திரயான் பற்றி உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பல மாணவர்கள் முன்வைத்த முக்கியமனான கேள்வி ஒன்றுக்கு விளக்கமான பதில் அளித்திருந்தேன். அதனை இந்தக் கட்டுரையில் வாசகர்களுக்கு சொல்லலாம் என்று இருக்கிறேன் அதனால் சென்ற பாகத்தில் பார்த்துக் கொண்டு இருந்த சந்திரயான் 1 பற்றி பிறகு பார்ப்போம். அம்மாணவர்கள் கேட்ட கேள்விகள் இவை தான் : சந்திரயான் விண்கலம் ஏன் பூமியை பலமுறை சுற்றிவிட்டு […]

வலையின் வீச்சு

ஒரு நல்ல எண்டர்டெயின்மென்ட் டெக்னிக் சொல்றேன் கேளுங்க. பெத்த பொண்ணுன்னா தான் இந்த டெக்னிக் ஒர்க் அவுட் ஆவும். முதல்ல ஏட்டிக்கு போட்டியா அவ கிட்ட என்னத்தையாவது சொல்லி கடுப்பேத்துங்க.அவ்வளவு லேசுல கோவம் வராது அவளுக்கு. இருந்தாலும் விட கூடாது. அவங்க அம்மாவையும் சேத்து நக்கலடிச்சி உசுப்பேத்தணும். ஒரு கட்டத்துல காளியாத்தா களத்துல இறங்கிடுவா. எள்ளும் கொள்ளும் வெடிச்சி தூள் பறக்கும். இப்ப தான் நீங்க நல்லா கவனிக்கணும். ஃபர்ஸ்ட் ஸ்டெப் இப்பொ இருக்கற அவளுடைய முகத்தை மறந்துடுங்க. […]

கவிதைப் பக்கம்

நீல ரத்தம் சொட்டச்சொட்டகாவியம் படைக்கிறதுபேனா. அதே கன்னங்கள், உதடுகள்சுவையில் வெவ்வேறுமுத்தங்கள். குடித்த நீரைமழையாய்த் தருகிறதுமரங்கள்.  வீணையைத் தொலைத்தவன்பாடலில்முன்வரிசையில் முகாரி. வீட்டின்நாசித்துவாரங்கள்ஜன்னல்கள். படுத்தபோது ஆகாயமும்விழித்தபோது மண்ணும்பார்த்திருந்தேன். விதைத்த விதைதந்ததுபல்லாயிரம். என் பையில்கணம் கூடுகிறது சில்லறைஎதிரில் கோயில் வாசல். முதலில் கொதித்ததுபொத்தி வைத்தஉலை. முத்து முத்தாய் எழுதுகிறதுஉழைப்பின் கவிதைகளைவியர்வை. குழந்தைக்காகஇசைந்திருக்கிறான்புத்தனுக்கு அறவேயில்லைமுத்த ஆசை. வெவ்வேறு சுள்ளிகள்எரியும் அடுப்பில்சமரசக் கூட்டணி. 0

ஊர் சுற்றி… போஜனம் தேடி…

அத்தியாயம் – 3  தமிழகத்தின் தலைநகராக இருக்க வேண்டிய நகரம். தமிழகத்தின் மத்தியப் பகுதியில் உள்ள நகரம். தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல பேருந்து வசதி உள்ள நகரம். தூங்கா நகரம் என்ற பெயரை உண்மையில் மெய்பிப்பது போல் மத்தியப் பேருந்து நிலையம் இயங்கும் நகரம். குறிப்பிட்ட ஜாதியினர் அதிகம் என்றில்லாமல் அனைத்து ஜாதி மற்றும் மதத்தினரும் இணைந்து வாழும் நகரம். எந்தவொரு பெரிய இன மற்றும் மத மோதலிலும் சிக்கிக்கொள்ளாமல் வளைய வரும் நகரம். பாராளுமன்ற […]

ஆத்ம பலம் தா… மனோ பலம் தா…

எங்கம்மா பாக்கதான் இப்படி அமைதியா இருக்காங்க ஆனா தனி ஆளா என்னையும் தங்கச்சியையும் வளர்க்க கஷ்டப்பட்டாங்க. அப்பா எங்க சின்ன வயசுலயே போயிட்டாரு. எங்கள BE, MBA ன்னு  படிக்க வச்சு நாங்க லைஃப்ல இப்ப நல்லபடியா செட்டில் ஆகி இருக்கோம்னா அம்மாவோட வைராக்கியம்தான் காரணம். சொத்தெல்லாம் சொந்தகாரங்க தின்னுட்டாங்க. யார் தயவும் வேணாம்னு ஒரு  சின்ன பள்ளிக்கூடத்துல டீச்சரா சேர்ந்து படிப்படியா தன்னைத் தகுதிப்படுத்திட்டு ஹெட்மிஸ்ஸா ரிடையர் ஆனாங்க! நான் ஸ்கூல் படிக்கும் போது நடந்தது… கூட இருந்த business partners ஏமாத்த, […]

Cinema நூலகம்

ஒரு திரைப்படம் மொழி எல்லைகளைக் கடந்து உலகின் வெவ்வேறு கலாச்சார சூழலுக்குள் வாழுகின்ற சகல மக்களின் பொதுவான உணர்வுக்குள் பயணிக்கத் தொடங்குகிறது என்றால் அவற்றை உலக சினிமா எனக் கொள்ளலாம் என்பது என் கருத்து. 2006ல் Kim Rossi Stuart (கிம் ரோஸி ஸ்டூவர்ட்) இயக்கத்தில் வெளிவந்த இத்தாலி நாட்டுத் திரைப்படமான “Along the Ridge” இந்த வகைக்குள் வரும் ஒரு படம். இப்படத்தின் திரைக்கதை பொதுவான ஒரு கருவில் பின்னப்பட்டிருந்தாலும் இந்தியச் சூழலுக்கும் இங்கிருக்கிற குடும்பங்களின் ஒரு முக்கியப் பிரச்சினையையும் மிக […]