வரலாற்றில் இன்று – ஜனவரி 18 – N T ராமராவ்

ஜனவரி 18 இன்று தென்னக திரைப்படங்களின் மிக முக்கியமான நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான திரு N T ராமராவ் அவர்களின் நினைவுநாள். 1925ஆம் ஆண்டில் பிறந்த இவர் தனது கல்லூரிப் படிப்பை குண்டூரில் உள்ள ஆந்திர கிருஸ்துவக் கல்லூரியில் முடித்தார். 1947ஆம் ஆண்டு அரசுப்பணியில் இணைந்த ராமராவ் மிகக் குறுகிய காலத்தில் தனது பணியை ராஜினாமா செய்தார். 19949ஆம் ஆண்டில் வெளியான மனதேசம் என்ற தெலுங்குப் படத்தில் இவர் அறிமுகமானார். ராமர் கிருஷ்ணர் போன்ற இதிகாச நாயகர்களின் வேடத்தில் பல படங்களில் நடித்த இவர் மிகவிரைவில் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் மிக முக்கியமான நடிகராக மாறினார்.   

1980 முதல் 1982ஆம் ஆண்டுக்குள் காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் நான்கு முதலமைச்சர்களை எந்தவிதமான காரணமும் இன்றி மாற்றியது. அப்போது ஆந்திராவின் மானத்தைக் காப்பாற்றுவோம் என்ற முழக்கத்தோடு ராமாராவ் தெலுங்கு தேசம் என்ற கட்சியை 1982ஆம் ஆண்டு தொடங்கினார். அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்று ஆந்திராவின் காங்கிரஸ் அல்லாத முதல் அரசை அமைத்தார்.  

                                                                                                 

 

 1984ஆம் ஆண்டு இதய அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த போது, அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. உடனடியாக நாடு திரும்பிய ராமராவ் இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து பெரும் போராட்டத்தைத் தொடங்கி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்

1984ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் பொதுத் தேர்தலில் இந்திரா காந்தியின் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாப அலையையும் மீறி ஆந்திராவில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் கட்சி விளங்கியது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான தேசிய முன்னணியை நிறுவ காரணமாக இருந்தார்.   

1994ஆம் ஆண்டு மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்ற இவரின் ஆட்சி ஒரு வருடத்திற்குள் இவரது மருமகனான சந்திரபாபு நாயுடுவால் பறிபோனது. 1996ஆம் ஆண்டு தனது 72ஆம் வயதில் இவர் காலமானார்

(Visited 19 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *