மாசு ஏற்படுவதைக் குறைக்க ஐந்தாண்டு திட்டம் தீட்டியுள்ளது மத்திய அரசு

புது டெல்லி :  உலகின் மாசு நிறைந்த நகரங்களின் பட்டியலை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் 9 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேர் மாசு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மாசுக் கட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில் இந்தியாவில் 5 ஆண்டு திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் மாசுவின் அளவை 20 முதல் 30 சதவீதம் குறைக்க இந்தத் திட்டம் வழிவகை செய்யும் என கூறப்பட்டுள்ளது.  2024 க்குள் அளவைக் குறைக்கச் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளில் தொழிற்சாலைகளின் மாசு அளவை கட்டுப்படுத்துதல், வாகனங்களால் ஏற்படும் மாசை குறைத்தல், கிராமப்புற சூளைகளில் உருவாகும் மாசினை கட்டுப்படுத்துதல் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 15 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *