பாதிக்கப்பட்ட பெண்ணைத் தனிமைப்படுத்தவும் எங்களைப் பிரிக்கவும் முயற்சி ;கன்னியாஸ்திரிகள் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பிஷப் மீது புகார்

கோட்டயம்: கேரளாவிலுள்ள கோட்டயத்தில் ஒரு பெண் கன்னியாஸ்திரி  பிஷப்  ஜலந்தர் பிரான்கோ முல்லக்கல் மீது  பாலியல் புகார் தொடுத்தார். அவருக்கு ஆதரவாக ஐந்து பெண் கன்னியாஸ்திரிகள் நியாயம் கேட்டு ஆதரவு குரல் கொடுத்தனர். ஆனால் இது திருச்சபையின் பெயரை மேலும் கெடுக்கிறது என்று கூறி ஐந்து கன்னியாஸ்திரிகளையும் வெவ்வேறு மாநிலங்களுக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து நேற்று அனுபமா என்ற கன்னியாஸ்திரி கூறுகையில், எங்களைப் பிரித்தாள நினைப்பதே இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்யவும், குற்றம் சுமத்திய பெண்ணை தனிமைப்படுத்தி வழக்கின் போக்கை பலவீனமாக்கவும் தான்.

அதனால்தான் நாங்கள் பஞ்சாப், பீகார் என்று சென்றுவிட்டால் இவ்வழக்கை எளிமையாக பலவீனப்படுத்திவிடலாம் என்று திட்டம் தீட்டுகிறது பிஷப் அணி.

என்னுடைய பைக்கிலேயே ப்ரேக் வயரை இரு முறை அறுத்திருக்கிறார்கள். என்ன நடந்தாலும் நாங்கள் இந்த கான்வென்டடை விட்டுச் செல்வதாக இல்லை.

நாங்கள் இந்த வழக்கை நேர்த்தியாகக் கொண்டு செல்வோம். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு இறுதிவரை தோள் கொடுப்போம். நியாயம் கிடைக்கும் வரை எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் போராடுவோம் என்று கூறினார் அனுபமா.

(Visited 16 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *