தமிழகம் தான் இந்தியாவிலேயே இரண்டாவது அதிக கடனை மத்திய அரசிடம் பெற்றுள்ள மாநிலம்
புதுடெல்லி: கடந்த மூன்று வருடங்களில் மத்திய அரசிடமிருந்து அதிக அளவுக்குக் கடன்களை ஆந்திராவும், தமிழகமும் பெற்றுள்ளது என்றி இந்திய நிதி அமைச்ச அறிக்கை தெரிவித்துள்ளது. மத்திய அரசு இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் சேர்த்து 1.57 லட்சம் கோடியை கடந்த மூன்று ஆண்டுகளில் கடனாக வழங்கியுள்ளது. இதில் ஆந்திராவும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்கள்தான் 20% கடனாகப் பெற்றுள்ளது.
ஆந்திரா 16,139 கோடி, தமிழ்நாடு 16,112 கோடியைக் கடனாகப் பெற்றுள்ளது. தமிழ்நாடு அதிக அளவிற்குக் கடன் வாங்கியுள்ளதால் அதன் கடன் தொகையும் அதிகரித்துள்ளது. வட்டி செலுத்தும் தொகையும் அதிகரித்துள்ளது.
மத்திய அரசிடமிருந்து கடன் வாங்குவதில் தமிழகத்திற்கும் மற்ற மாநிலங்களுக்கும் ஒரு லாபமிருக்கிறது. 3% வட்டி செலுத்தினால் போதும், இதுவே வெளியிலிருந்து கடன் வாங்கினால் கூடுதலாக செலுத்த வேண்டி வரும். மாநில அரசுகளின் செயல் திட்டத்திற்காக மத்திய அரசு தன்னாலான கடனைத் தருகிறது. ஆனால் கடன் வாங்கும் தமிழகம் போன்ற மாநிலங்கள் கடனை பெற்று மாநில வருவாயைப் பெருக்க முயற்சி செய்ய வேண்டும். அதற்கு பதிலாக பணம் பெற்றது ஒரு திட்டத்திற்கும், செலவுகளை அரசின் நலத்திட்டங்களுக்கும் செலவழித்தால் மிக மோசமான நெருக்கடியில் மாநிலத்தைத் தள்ளிவிடும்.
தமிழகம் வருவாயைக் காட்டிலும் பற்றாக்குறை அதிகமாக இருக்கும் மோசமான மாநிலங்களில் ஒன்று. பெரும்பாலான மாநில அரசின் செலவும் சரி, வருமானமும் சரி, கடனாகப் பெறுவதிலிருந்தே தமிழக அரசு செயல்படுகிறது. நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் இது மிக மோசமான இடத்திற்கு மாநிலத்தைக் கொண்டு செல்லும். மத்திய அரசிடம் பெரும் தொகையை முறையாக வருமானம் வரும் வகையில் செலவழிக்க வேண்டும்.