கட்டுரை திருடியதா தி இந்து? ஊடகங்களில் பரபரப்பு

இந்தியாவின் பிரபல ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்று தி இந்து. தற்போது தமிழிலும் தமிழ் தி இந்து என்ற பெயரில் வருகிறது. இன்றைய காலகட்டத்தில் முற்றிலும் இடதுசாரி சிந்தனையுடன் வெளிவரும் பத்திரிகை என்றபோதும் ஆங்கில மொழி, செய்திகளை ஆராய்ந்து சொல்லும் தரம் ஆகிய விஷயங்களில் தரம் தாழாது சமீப காலம்வரை இருந்து வந்தது தி இந்து பத்திரிகை.

கஸ்தூரி ஐயங்கார் என்பவர் விடுதலைப் போராட்ட காலத்தில் இருந்து தேசபக்தி, காந்திய கொள்கை போன்ற அடிப்படைகள் கொண்ட போதும் தவறு எங்கிருப்பினும் தவறாது சுட்டிக்காட்டி நடுவுநிலை மாறாது நடத்திவந்த இந்து பத்திரிகை 1990களில் முற்றிலும் ஒரு சார்பாக மாறத்தொடங்கியது.

இருந்த போதும் செய்திகளை, ஆய்வுகளை தாங்களே முன்னின்று செய்து வெளியிட்டு தங்களின் தனித்தன்மையை காத்து வந்தனர். இந்நிலையில் 2003 முதல் 2012 வரை தீவிர இடதுசாரியான என்.ராம் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். அப்போதிருந்து பத்திரிகை அதன் தனித்தன்மை இழந்தும் தரம் தாழ்ந்தும் வெளிவருவதாகச் சொல்லி பலரும் தங்கள் சந்தாவை நிறுத்தினர்.

இந்நிலையில் இன்று வெளிவந்துள்ள ரஃபேல் விமான கொள்முதல் குறித்த கட்டுரை வேறொருவர் எழுதியது என்றும் அதை ராம் தன் பெயரில் வெளியிட்டு தன்னுடைய ஆய்வு போல காட்டிக் கொண்டுள்ளார் என்று Op India என்ற இணைய பத்திரிகை குற்றம் சுமத்தி உள்ளது.

எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் மனு பப்பி என்பவர் கடந்த 2018 செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி எழுதிய கட்டுரையில் உள்ள தகவல்களை அப்படியே தன் கட்டுரையில் எடுத்தாண்ட ராம் அதை தி இந்து எக்ஸ்க்ளூசிவ் என்று தம் பத்திரிகைக்கு சொந்தம் கொண்டாடியதாக ஆப் இந்தியா பத்திரிகை அம்பலபடுத்தி உள்ளது.

இணையதளம், சமூக வலைத்தளங்களில் செயல்பட்டு வரும் பல பொது மக்களும் பத்திரிகையாளர்களும் இந்தத் தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

என்.ராம் இப்படி காப்பியடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை, அதையும் தன் வேலை போலக் காட்டிக் கொண்டது நியாயமற்ற செயல்  என்று பல பத்திரிகையாளர்களும், சிந்தனையாளர்களும், பொதுமக்களும் சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். தி இந்து தரப்பில் இருந்து இது குறித்து இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 990 times, 1 visits today)
9+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *