தாய் நாட்டின் அகதிகள் -காஷ்மீர் பண்டிட்கள்

 

ஜனவரி 19ம் தேதி 1990 மற்றும் ஆண்டு இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு தினம்.  காஷ்மீரின் பூர்வகுடிகளாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்த காஷ்மீர் பண்டிட்கள் , பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரின் இஸ்லாமிய குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று.இன்றுடன் 29 ஆண்டுகள் முடிந்திருந்தாலும் அந்த கருப்பு நாளை  இந்திய வரலாற்றின் பக்கங்களில் இருந்து யாராலும் எடுக்க முடியாது.

இந்துக்களான பண்டிட்களுக்கு முன் மூன்று வாய்ப்புகள் இஸ்லாமிய குழுக்களால் கொடுக்கப்பட்டது.இஸ்லாமுக்கு மாறுங்கள்.இல்லையேல் காஷ்மீரை விட்டு வெளியேறி விடுங்கள்.

கடைசியாக கொல்லப்படுவது.. கிட்டத்தட்ட 5 லட்சம் பண்டிட்கள் கிடைத்த பொருட்களை எடுத்து கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். பெரும்பாலான அப்பாவி மக்கள் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டார்கள்.

சொந்த வீடுகளில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டு ஒரே இரவில் சொந்த நாட்டில் அகதிகளாக மாற்றப்பட்ட அவலம்.. இந்த நாளை நினைவு கொண்டு படுகொலை செய்யப்பட்டு, தப்பிப் பிழைத்து அகதிகளாக வாழும் பண்டிட்கள் மீண்டும் தாங்கள் சொந்த மண்ணுக்கு செல்ல வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் பிரார்த்தனையாக இருக்க வேண்டும்.

 

 

 

 

(Visited 26 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *