எதிர்க் கட்சிகள் ஒன்று கூடுவது என்னை எதிர்த்தல்ல; இந்தியாவை எதிர்த்தே – மோடி

ஆமதாபாத் : குஜாத் உலகத் தொழில் மாநாட்டில் எல் அண்ட் டி யின் காம்ப்ளெக்சை திறந்து வைத்த மோடி பேசியதாவது, எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்னை எதிர்த்தல்ல. தங்களின் சுய நலத்திற்காகத் தான்.  அவர்கள் இந்தியாவை எதிர்த்து ஒன்று சேர்கிறார்கள்.

மக்கள் பலனடையவும் வளமாக இருக்கவும் தான் பாடுபடுகிறோம். எதிர்க்கட்சிகள் எங்களைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். அவர்கள் ஒற்றுமையுடன் எங்களை எதிர்க்க ஒன்று கூடவில்லை.  பதவிகளைப் பங்கு போட்டுக் கொள்ளத்தான், ஒன்று கூடி எதிர்க்கப் பார்க்கிறார்கள். எங்களைப் பார்த்து அவர்களுக்கு உறக்கமே வருவதில்லை.

என் காதில் விழும் சப்தமெல்லாம்  ” எங்களைக் காப்பாற்றுங்கள்.. எங்களைக் காப்பாற்றுங்கள் ” மட்டுமே என்று மோடி மம்தா கூட்டம் நடத்துவதைத் தாக்கிப் பேசினார்.

மோடியை எதிர்ப்பது என்பது மோடி எதிர்ப்பல்ல… அது மக்களை எதிர்ப்பது…. என்று பேசினார்.

(Visited 17 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *