தமிழ் ராக்கர்ஸ்கே நேரடியாக படத்தை விற்று விடலாம்- எஸ் வி சேகர்

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் இருக்கிறோம்.  தமிழ் ராக்கர்ஸ் புதிய படங்களை உடனுக்குடன் வெளியிடுகிறது. அந்த இணைய தளத்தை குற்றம் சொல்ல முடியாது என்று நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர் கூறியுள்ளார்.

விஷால் தமிழ் ராக்கர்சை மூன்று மாதத்தில் ஒழித்து விடுவோம் என்றெல்லாம் சபதம் போட்டார். ஆதற்காக இணையதள அணி ஒன்றையும் உருவாக்கினார். தமிழ் ராக்கர்ஸ் படங்களை வெளியிடுவதை தமிழ் திரைப்பட உலகால் தடுக்கவே முடியவில்லை.

ஒவ்வொரு புதுப்படமும் வரும்போது, அதனை இணைய தளங்களில் வெளியிடக் கூடாது என்ற உத்தரவை நீதிமன்றம் மூலம் தயாரிப்பாளர் தரப்பு பெற்று வருகிறது. ஆனால் எதையும் மதிப்பதாக இல்லை தமிழ் ராக்கர்ஸ். இன்னும் சிலர் தயாரிப்பாளர் தரப்பே இத்தனை நாட்கள் கழித்து HD யில் போட உதவுவதாகவும் அதுவரையில் படத்தை வெளியிட வேண்டாம் என்றும் கருத்துகள் உலவின. சில தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை இணையதளத்தில் வெளியிடவும் வெளிநாட்டு விநியோகஸ்தர்களை வைத்து விற்கிறார்கள் போன்ற பல வதந்திகள் உண்டு.

தொடர்ந்து முடக்கப்பட்டபோதிலும், இணைய தள முகவரியில் சில வார்த்தைகளை மாற்றி பீனிக்ஸ் பறவையாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் செயல்படுகிறது. இந்த நிலையில், பைரசி ஒழிப்பது தொடர்பாக நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

தமிழ் ராக்கர்ஸை குறை சொல்வதில் எந்தவொரு அர்த்தமும் கிடையாது. தொழில் நுட்ப வளர்ச்சி வந்து விட்ட காலத்தில் உள்ளோம் . உலகில் உள்ள அனைவரையும் போட்டோகிராஃபர்களாக செல்ஃபோன் மாற்றி விட்டது. எனவே இதையெல்லாம் தடை செய்ய இயலாது என்றார்.

 

(Visited 20 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *