கனகதுர்கா செய்த மாபெரும் தவறுக்கு எங்கள் குடும்பத்தை மன்னியுங்கள்-அண்ணன் பரத்

சில வாரங்களுக்கு முன்பு ஆளும் கேரளா கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கனகதுர்கா மற்றும் பிந்து என்ற இரு பெண்கள் கேரளா காவல்துறை அதிகாரிகள் துணையோடு சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானம் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்து மத நம்பிக்கை கொண்ட பொது மக்களிடம் இது பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது..

இது போன்று தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் நம்பிக்கைகளுக்கு எதிராக கேரளா அரசு பெண்களை கோயில் சன்னிதானத்துக்கு அழைத்து செல்ல முயற்சி செய்து வருகிறது.

கேரளா அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று திருவனந்தபுரத்தில் லட்சக்கணக்கான மக்களும் ஆன்மிக தலைவர்களும் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய கனகதுர்காவின் சகோதரர் பரத் பூஷன் தன் சகோதரி மிக பெரிய தவறிழைத்து விட்டதாகவும் இதற்காக தன் குடும்பத்தை மக்கள் மன்னிக்க வேண்டும் என்றும் மனமுருகி கேட்டு கொண்டார்.மேலம் தன் சகோதரி இந்திய மக்களிடையே தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே தங்களுடைய குடும்பத்தினர் கனகதுர்காவை சேர்த்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

 

 

(Visited 17 times, 1 visits today)
3+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *