பாஜகவில் இணைந்த 100 க்கும் அதிகமான “தல ” அஜித் ரசிகர்கள்

திருப்பூர்: திருப்பூரில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் தமிழக பாஜகவில் இணைந்தனர். அதன் முக்கிய நிகழ்வாக நடிகர் மற்றும் ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் அஜித் அவர்களின் ரசிகர்கள் 100 க்கும் மேற்பட்டோர் ஹரி அஜித் தலைமையில் இணைந்தனர்.

அவர்களைப் பாராட்டிப் பேசிய தமிழிசை, அஜித் மிகவும் நேர்மையானவர். நல்லவர். அவரைப் போலவே நீங்களும் நல்லவர்களாக உள்ளீர்கள். மோடி தலைமையில் நாடு வளர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இணைந்த உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

மேலும் அவர் பேசும் போது, சென்னை லயோலா கல்லூரியில் நடக்கும் ஓவியக் கண்காட்சியில் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் இழிவுபடுத்தும் வகையில் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதை முக ஸ்டாலின் உள்ளிட்ட மதசார்பின்மை பேசுபவர்கள், நடுநிலையாளர்கள் பேசாமல் வாய் மூடி உள்ளனர்.

 

நேற்றைய டெல்லி கூட்டத்தில் யார் பிரதமர் வேட்பாளர் என்று ஏன் ஸ்டாலின் அறிவிக்கவில்லை? சென்னையில் ராகுல் என்று சொன்னவர் ஏன் கொல்கத்தாவில் சொல்லவில்லை? பயமா என்று கேள்வி எழுப்பினார்.

(Visited 23 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *