என் மதம்தான் என் அம்மா ; லயோலா கல்லூரியின் இந்து மத அவமதிப்பைக் கண்டு கொந்தளித்த நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

சென்னை: தமிழ் சினிமாவின் பல படங்களில் குணச்சித்திரம் ஏற்று நடித்தவரும் , தனியார் தொலைக்காட்சி ஒன்றில் “சொல்வதெல்லாம் உண்மை” என்ற நிகழ்ச்சியை வழங்கிய பிரபல நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் .  லயோலா கல்லூரி இந்து மத நம்பிக்கைகளையும் கடவுள்களையும் அவமதிக்கும் விதமாக ஓவியக் கண்காட்சி என்ற பெயரில் செய்த கீழ்த்தரமான செயலைக் கண்டித்து ட்விட் பதிவு போட்டுள்ளார்.

சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஜேபி மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை எதிர்த்து ஓவியங்கள் வரைந்துள்ளனர்.

அதில் ஹிந்து கடவுள்களை பயன்படுத்தியுள்ளனர், இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் ஒரு நபர் , இதில்  கண்டனம் தெரிவிக்க என்ன இருக்கிறது என கேட்க ‘உங்க அம்மாவைத் திட்டினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா?. எனக்கு என் மதம் தான் அம்மா’ என்று காரசாரமாக  அளித்துள்ளார்.

லயோலா கல்லூரியின் இந்த இழி செயலுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதனால் மனம் வருந்திய பலரும் ஆன்லைன் மூலம் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 25 times, 1 visits today)
3+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *