நேபாளத்தில் 2000, 500, 200 ரூபாய் நோட்டுகளுக்கு தடை

காத்மண்ட்: நேபாளத்தில் இந்தியாவின் ரூ.2,000, 500, 200 நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக சுற்றுலாத்துறை பாதிக்கும் என்று நேபாள வர்த்தகர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு புதிதாக ரூ.200, 500, 2000 நோட்டுகள் வெளியிடப்பட்டன. இந்த நடவடிக்கையால் நேபாளம், பூடான் போன்ற அண்டை நாடுகளிலும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தியாவின் ரூ.100 மற்றும் அதற்கு கீழ் மதிப்புள்ள நோட்டுகளை வழக்கம் போல் பயன்படுத்தலாம் என்றும்,  200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்குத் தடை விதித்து நேபாள மத்திய வங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘நேபாளிகள் யாரும் மேற்கூறிய தொகையில் இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தக் கூடாது, வெளிநாடுகளில் இருந்து எடுத்து வரக்கூடாது. இந்த நோட்டுகளை வர்த்தகத்துக்கும், பொருட்கள் வாங்கவும் பயன்படுத்த முடியாது. ’’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து  வருடந்தோறும்  சராசரியாக 12 லட்சம் பேர் தரைவழியாகவும், 1,60,132 பேர் விமானத்திலும் நேபாளத்துக்கு சுற்றுலா வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நேபாளத்துக்கு சுற்றுலா வரும் இந்தியர்கள் சராசரியாக 5 முதல் 8 நாட்கள் தங்குகின்றனர். நேபாளத்தில் சுற்றுலா பயணி ஒருவரின் செலவு சராசரியாக ரூ.11,310 ஆக இருக்கிறது. தற்போது உயர்மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்திருப்பதால், சுற்றுலாவால் கிடைக்கும் வருவாய் கணிசமாகக் குறையும்’’ என்று குற்றம் சாட்டி உள்ளனர்.

ஆனால், ‘‘நேபாளத்துக்கு இந்திய சுற்றுலா பயணிகள்தான் அதிகளவில் வருகின்றனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், ‘‘பெரும்பாலான இந்தியர்கள் நேபாள எல்லையை ஒட்டியுள்ள இந்திய பகுதிகளில் இருந்துதான் தரைவழியாக சுற்றுலா வருகின்றனர். அவர்களால் ரூபாய் நோட்டுகளை டாலராகவோ யூரோவாகவோ மாற்றிக் கொண்டு வருவது சிக்கலானது. இதனால் பயணிகளின் வருகை குறையும்’’ என்கின்றனர்.

 

(Visited 5 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *