அன்புமனைவி மனைவி சௌம்யாவிற்கு எம்பி சீட்? பாமக திட்டம்

சென்னை: வரும் 2019 லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிக்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கி விட்டதாகவும், அதிமுக பாமக இணைந்து தேர்தலைச் சந்திக்கவும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.

பாமகவிற்கு குறைந்தது 7 தொகுதிகள் மற்றும் ராஜ்ய சபா உறுப்பினராக ஒரு தொகுதி என்றும் திட்டமிட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வருகின்றன. ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை அன்புமணியின் மனைவியான சௌம்யாவிற்கு கேட்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

பாமக பலம் குறையாத கட்சி இரு தினங்களுக்கு முன்பாக நமது தளத்தில் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். அதிமுக வலுவிழந்துள்ள இந்த நிலையில் பாமகவின் உதவி அதிமுகவிற்கு வட மாவட்டங்களில் பெரிதும் உதவும். மேலும் அது திமுக அணிக்குக் கலக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 20 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *