அஜித்தை நான் எப்போது அரசியலுக்கு அழைத்தேன்; பொய் சொல்லும் மீடியாக்களைப் போட்டுத்தாக்கிய தமிழிசை

அஜித்தின் ரசிகர்கள் 100 க்கும் மேற்பட்டோர் சமீபத்தில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அஜித்தைப் பாராட்டி தமிழிசை பேசியிருந்தார். இதை தமிழக ஊடகங்கள் அஜீத்த அரசியலுக்கு இழுக்க பாஜக முயல்கிறது என்று செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வந்தன. அதற்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். அவர் கூறியதாவது:

நாங்கள் அஜீத்தை பாஜக-வில் சேருமாறு அழைப்பு விடுக்கவில்லை. அவர் நடிக்க ஆசைப்பட்டால், நடிக்க மட்டும் செய்யட்டும். அதற்கு யாரும் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை. மாணவர்களைத் தவிர வேறு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதை மையப்படுத்தித்தான் நான் பேசினேன்.  அஜித் ஸ்திரமாக  அவரது நிலைப்பாட்டில் இருப்பதை வரவேற்கிறேன். அதேபோல எனது நிலைப்பாட்டிலும் நான் ஸ்திரமாக இருக்கிறேன்.

சில தொலைக்காட்சிகளில் அஜித்தை அரசியலுக்கு நான் அழைத்தாதாக சொல்லப்படுகிறது. தெளிவாக சொல்கிறேன், அப்படி எந்த அழைப்பு விடுக்கப்படவில்லை” என்று பொய் சொன்ன ஊடகங்களை நேரடியாகவே தாக்கிப் பேசினார்.

அஜித் தனது ரசிகர்கள் தமது பெயரை முன்னிறுத்தி சேர்ந்தமையால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், தனது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தினார். அதில் , “எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபட ஆர்வம் இல்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல். நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை. நிர்பந்திக்கவும் மாட்டேன். நான் சினிமாவில் தொழில் முறையாக வந்தவன். நான் அரசயில் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவே இங்கு வரவில்லை. என் ரசிர்களுக்கும் அதையேதான் நான் வலியுறத்தியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் பெற்று வரும் நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, “அஜித்தை நான் இன்றைக்கும் மதிக்கிறேன். ஒரு சம்பவம் சொல்கிறேன். நான் குழந்தை நல மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு அவர் உதவி செய்தார். அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவர் அஜித். அப்படிப்பட்டவரின் ரசிகர்கள்தான் நீங்கள் என்றுதான் நான் பேசினேன். எங்கும் அஜித்தை எண்கள் கட்சியில் சேர்வதற்கு அழைப்பெல்லாம் விடுக்கவில்லை. ஊடகங்கள் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று கடிந்து கொண்டார்.

 

 

(Visited 30 times, 1 visits today)
3+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *