மோடியை நீக்குவதே எதிர்க்கட்சிகளின் முதல் குறிக்கோள்: ஏழ்மையையும் ஊழலையும் நீக்குவதே எங்களது முதற் குறிக்கோள் -அமித் ஷா

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று பாஜகவின் நாடாளுமன்ற பிரச்சாரத்தைத் துவக்கி வைத்துப் பேசிய அமித் ஷா ” பங்களாதேசிலிருந்து வந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க முயற்சிகளை எடுப்போம். மம்தா அகதிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்றார்.

மேலும் அவர் பேசுகையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மஹா கட்பந்தன் என்ற பெயரில் கூட்டம் நடத்தினார்களே, ” ஒருமுறையேனும் வந்தே மாதரம் என்றோ, பாரத் மாதாக்கி ஜே ” என்றோ ஒரு தலைவராவது சொன்னார்களா? மாறாக, மோடி.. மோடி… என்று மோடியை மட்டுமே உச்சரிக்கின்றனர்.”

அவர்கள் தங்களது சுயநலத்திற்காக , மோடியையும் பாஜகவையும் எதிர்க்கிறார்கள். மோடியை நீக்குவதே அவர்களின் முதல் குறிக்கோளாக உள்ளது. நாங்கள் வறுமையையும் ஊழலையும் ஒழிப்பதையே முதற் குறிகோளாகக் கொண்டு செயலாற்றி வருகிறோம்”. இவ்வாறு அவர் பேசினார்.

(Visited 17 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *