
கேரள கம்யுனிஷ அரசின் மூர்க்கத்தனத்தால் சபரிமலைக்கு 96.55 கோடி வருவாய் இழப்பு
பம்பா: திருவாங்கூர் தேவஸ்வம் போர்ட் தான் சபரிமலை கோயிலைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த சீசனோடு ஒப்பிடுகையில், சபரிமலையின் வருவாயில் 30% வருவாய் இழப்பு நடந்துள்ளது என்றும், இதனால் இந்த ஆண்டு 96.55 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது.
கேரள கம்யுனிஷ அரசு பக்தர்களின் மன நிலையைப் புரிந்து கொள்ளாமல், எப்படியாவது பெண்களை உள்ளே கொண்டு செல்ல வேண்டும் என்பதால் 144 தடை உத்தரவை இரு மாதங்களுக்கும் மேலாக நீட்டித்தது. மேலும் பக்தர்களின் போராட்டம் போன்ற காரணங்களால் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தாண்டு பக்தர்களின் வருகையில் எண்ணிக்கை குறைவு ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது பக்தர்கள் , சுவாமி தரிசனம் செய்து விட்டு அங்கு மெதுவாக உணவருந்துதல், தங்குதல் செய்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு பல வணிகர்களும் அரசின் கெடுபிடியால் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளனர்.