கோவையில் கார் மோதி இரண்டு பள்ளி மாணவர்கள் பலி

கோவையைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் டேனியல் மற்றும் அவர் நண்பர் தரணீஸ்வரன் ஆகியோர் சாலை விபத்தில் பலியானார்கள்.
இந்த இரண்டு பதினைந்து வயது சிறுவர்களும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது, எதிரே வந்த கார் ஒன்றில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காரின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது சம்பந்தமாக வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் ரவி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள் பைக் மற்றும் ஸ்கூட்டர் ஓட்டுவது தடை செய்யப்பட்ட ஓன்று. எனவே இந்த சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
(Visited 3 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *