குடியரசு தின சிறப்பு விருந்தினர் தென் ஆப்பிரிக்க அதிபர்

புது டெல்லி: வரும் வெள்ளிக்கிழமை ( ஜனவரி 26) அன்று குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் வெளிநாட்டைச் சேர்ந்த பல தலைவர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

அந்த வகையில், இந்தாண்டு தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோஸா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இரு நாட்கள் பயணமாக அவரும் கூட 9 உயர் அதிகாரிகள் உட்பட 50 தொழில் அதிபர்களும் வருகின்றனர். சிறப்பு விருந்தாளியாக சிறில் இருப்பார் என்று ஜனாதிபதி மாளிகைக் குறிப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

நெல்சன் மண்டேலாவிற்குப் பிறகு இவர்தான் இந்திய குடியரசு தினத்தில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து கலந்து கொள்ளும் தலைவராவார். மேலும் இதுவே இந்தியாவிற்கு அதிபராக அவரது முதல் வருகை ஆகும்.

 

(Visited 16 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *