2019, 2020 ல் இந்தியாவில் தான் வேகமான பொருளாதார வளர்ச்சி – ஐ.நா அறிக்கை
ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவே உலகில் அடுத்த இரு ஆண்டுகளுக்கு வேகமான பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக விளங்கும் என கணித்துள்ளது. 2019-20 ல் இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி 7.6% ஆக இருக்கும் என அறிவித்துள்ளது. மார்ச் 2019 ஆண்டு முடிவில் 7.4 % ஆக இருக்குமென தெரிவித்துள்ளது. 2020 ல் , ஜிடிபி குறைந்தால் கூட 7.4%-ஆக இருக்குமென அறிக்கை வெளியிட்டுள்ளது.
சீனாவைப் பொறுத்தவரையில் சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி 2018 6.6% ஆக உள்ளது . அது 2019 ஆம் ஆண்டில் 6.3% ஆகக் குறையுமென்றும், 2020 ல் 6.2% ஆகக் குறையுமென்றும் அறிவித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி சீனாவைக் காட்டிலும் அதிகமாவே இருக்கும். சீனாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டைக் காட்டிலும் குறையும் என்று ஐ.நாவின் 2019 ஆண்டு அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் தனியார் மிதலீடுகளைப் பொறுத்து அதன் பொருளாதார வளர்ச்சி அமையும்.