செய்திகள்விளையாட்டு
ஆஸி ஓப்பன் டென்னிஸ்: க்விடோவா, ஒசாகா இறுதிப் போட்டிக்குத் தகுதி
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் செக் குடியரசைச் சேர்ந்த தரவரிசையில் 8 ஆம் இடத்திலுள்ள க்விடோவா, அமெரிக்காவைச் சேர்ந்த 35 வது இடத்திலுள்ள கோலின்சை 7-6, 6-0 என்ற நேர்செட்களில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். இந்தப் போட்டி 1மணி நேரம் 34 நிமிடங்களுக்கு நீடித்தது.
இன்னொரு அரையிறுதி போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த தரவரிசையில் 4 ஆம் இடத்திலுள்ள ஒசாகா, செக். குடியரசைச் சேர்ந்த தரவரிசையில் 7 ஆம் இடத்திலுள்ள பிளிஸ்கோவாவை 6-2, 4-6, 6-4 என்ற செட்களில் வென்றார். இந்தப் போட்டி 1மணி நேரம் 53 நிமிடங்களுக்கு நீடித்தது.
(Visited 15 times, 1 visits today)