சீன அமைச்சர்கள் – ராகுல் காந்தி ரகசிய சந்திப்பு?

இன்று ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்த Reimagining India என்ற கருத்தரங்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் தானியங்கல் (automation) குறித்தும் அதனால் ஏற்படும் வேலையிழப்பு குறித்தும் இளைஞர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி ஐரோப்பிய இந்திய பொருளாதாரங்களே தானியங்கலால் பாதிக்கப்படுகின்றன, சீனம் ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் 50000 வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று கூறினார். தானியங்கல் மற்ற நாடுகளில் பிரச்சனையாக உருவெடுத்து வருகையில் சீனாவுக்கு மட்டும் ஏன் பிரச்சனையாக இல்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தாம் கைலாச யாத்திரை போனபோது மானசரோவர் ஏரி அருகே சீன அமைச்சர்களை சந்தித்துப் பேசியதாகவும் அப்போது அவர்கள் தானியங்கல் (automation) தங்கள் நாட்டுக்கு ஒரு பிரச்சனையே அல்ல என்றும் 24 மணிநேரத்துக்கு 50000 வேலை வாய்ப்புகள் வீதம் தாங்கள் உருவாக்கி வருவதாகவும் சீன அமைச்சர்கள் மெரிவித்ததாக ராகுல் சொன்னார்.

ராகுல் சென்ற 2018ல் கைலாய யாத்திரை போனபோது சீன அமைச்சர்களைச் சந்தித்தது பற்றி எந்தத் தகவலும் இல்லை. இந்தியக்குடிமக்கள் அயல்நாட்டுத் தலைவர்களை சந்தித்தால் அரசுக்கு அது குறித்து விவரம் தர வேண்டும் என்று சட்டம் உள்ளது. எதிர்கட்சியான காங்கிரஸின் தலைவராக இருக்கும் ராகுல் இந்தச் சந்திப்பு குறித்தும் பேசப்பட்ட விஷயங்கள் குறித்தும் அரசுக்குத் தெரிவித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2017ல் தோக்லம் பகுதியில் சீனா ஆக்கிரமிப்புக்கு முயன்று நம் ராணுவம் எதிர்நின்று சீனர்களை தடுத்துக் கொண்டிருந்த போது ராகுல் ரகசியமாக சீனத்தூதரை சந்தித்தார். பத்திரிகைகளில் செய்தி வந்தபோது மறுத்தார். தவறான தகவலை பாஜக பரப்புகிறது என்று குற்றம்சாட்டினார். ஆனால் சில நாட்களில் சீனத்தூதரக இணையதளத்தில் ராகுல் – சீனத்தூதர் சந்திப்பு உறுதி செய்யப்பட்டது.

அது போல கைலாச யாத்திரையில் சீன அமைச்சர்களை சந்தித்த ராகுல் இத்தனை நாட்களாக உண்மைகளை மறைத்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. உண்மை விரைவில்  வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.

(Visited 29 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *