ஓ.பன்னீர்செல்வம், கிரிஜா வைத்தியநாதனுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம், தலைமைச் செயலாளா் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மீது சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலகம் போன்ற இடங்களில்  மதம் தொடா்பான விழாக்கள் நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை மீறும் வகையில் துணைமுதல்வா்  பன்னீா் செல்வம் யாகம் நடத்தியதாக எழுந்த குற்றச்ச்சாட்டில் மற்றும்  கிரிஜா வைத்தியநாதன், பன்னீர் செல்வம்  ஆகியோா் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதாக குறிப்பிட்டு அவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஆனூா் ஜெகதீசன் என்பவா் தாக்கல் செய்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் உள்ள துணைமுதல்வா் அலுவலகத்தில் கடந்த வாரம் அதிகாலை 3 மணியளவில் சிறப்பு யாகம் நடைபெற்றதாகவும், இந்த யாகத்தில் துணைமுதல்வா் பன்னீர் செல்வம் கலந்து கொண்டதாகவும் தமிழக எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலின் குற்றம் சாட்டினாா். தலைமைச் செயலகத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடா்ந்து துணைமுதல்வா் பன்னீா் செல்வம் இது தொடா்பாக கூறுகையில், தலைமைச் செயலகத்தில் யாகம் நடைபெறவில்லை. பூஜை மட்டும் தான் நடைபெற்றது என்று தொிவித்தாா். வழக்கு போடுபவர்களிடம் ஆதாரம் இருந்தால் மட்டுமே இதுபோன்ற வழக்குகள் நிலைபெறும். இல்லையேல் வெறும்
அரசியல் பரபரப்புக்கு போடப்பட்ட வழக்காகத் தள்ளுபடிசெய்ய வாய்ப்புகள் உள்ளன.

(Visited 10 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *