செய்திகள்விளையாட்டு
ஆஸி. ஓப்பன் டென்னிஸ் : டிஜோகோவிக் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் 2019 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் அரைஇறுதிப் போட்டியில்,இன்று தரவரிசையில் முதலாம் இடத்தில் உள்ள , செர்பியாவைச் சேர்ந்த டிஜோகொவிக் , தரவரிசையில் 28 ஆம் இடத்திலுள்ள பிரான்சைச் சேர்ந்த பௌல்லியை 6-0, 6-2, 6-2 என்ற நேர்செட்களில் எளிமையாக வென்றார். இதன் மூலம் டிஜோகோவிக் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 23 நிமிடங்களுக்கு நீடித்தது.
ஆடவர் இறுதிப்போட்டியில் செர்பியாவின் டிஜோகோவிக் (1 வது இடம்) , ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடாலை (2 வது இடம்) எதிர்கொள்கிறார். உலகின் இரு முதல் நிலையில் உள்ள இரு வீரர்களும் எதிர்கொள்வதால் போட்டி பலமாகவும் சுவராஸ்யமாகவும் இருக்குமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
(Visited 16 times, 1 visits today)