இரண்டாவது ஒரு நாள் போட்டி; இந்தியா அபார வெற்றி
நியுசிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆ சர்மா 82 ரன்களும், ஷிகர் தவான் 66 ரன்களும் எடுத்து நல்ல துவக்கத்தை அளித்தனர்.தற்போது 50 ஓவர்களில் இந்திய அணி 324/4 ரன்களைக் குவித்தது. அனைத்து வீரர்களும் நன்றாகவே தங்களது பங்களிப்பைச் செய்தனர். கோலி 43, அம்பத்தி ராயுடு 47 ரன்களை எடுத்தனர். தோனி ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்திருந்தார்.
இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த நியுசிலாந்து அணி 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிக பட்சமாக ப்ரேஸ்வெல் மட்டும் 57 ரன்களை எடுத்தார். இந்திய அணியைப் பொறுத்தவரையில் சுழல் பந்து வீச்சாளர்களான குல்திப் யாதவ், சாகல் முறையே 4 , 2 விக்கெட்டுகளை எடுத்தனர். புவனேஷ்வர் குமார் 2 விக்கெடுக்களை எடுத்தார். இதன் மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.