பத்ம விருதுகள் – எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் அன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள் நாட்டிருக்காக பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்ததவர்களை அடையாளம் கண்டு ,அவர்களை பாராட்டி நாட்டின் உயர்ந்த விருதுகளை வழங்குவதன் மூலம் அவர்களின் சேவையை மக்களிடம் கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1ம் தேதி முதல் செப்டெம்பர் 15 வரையிலான காலகட்டங்களில் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
அனைத்து மாநிலங்கள், முதல்வர்கள், பொது துறை ,தனியார் துறை என நாட்டின் எந்த குடிமகனும் யாரை வேண்டுமானாலும் பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்து விண்ணப்பிக்கலாம்.

நீங்களே உங்களுக்காக விருதுக்கு உங்களையே பரிந்துரை செய்து விண்ணப்பிக்கலாம் .

ஒரே ஒரு நிபந்தனை அந்த நபர் குறிப்பிடத்தக்க வகையில் நாட்டுக்கு தான் சார்ந்த துறையில் பங்காற்றி இருக்க வேண்டும்.
விருதுகளுக்கு பரிந்துரைப்போர் அல்லது விண்ணப்பிப்போர் மத்திய அரசின் கீழ் இயங்கும் இணைய தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் .

விண்ணப்பங்கள் பாரத பிரதமர் அமைக்கும் பத்ம விருதுகள் தேர்வு குழுவின் பரிசீலனைக்கு பின், விருதுக்கான பட்டியல் பிரதமரிடம் வழங்கப்படும் .
விருதினை பெறுவோர் எந்த மாநில அரசால் பரிந்துரை செய்யப்பட்டனர் என்கிற தகவலுடன் விருதுகள் அறிவிக்கப்படும் .

இந்த ஆண்டு மேலும் பலருடன் பிரபு தேவாவை கர்நாடகாவும் ,பங்காரு அடிகளாரை தமிழ்நாடும் பரிந்துரைத்துள்ளது.

மத்தியில் பாரதீய அரசு பதவிக்கு வந்த 2014 ம் ஆண்டு முதல்
வெளியுலகுக்கு தெரியாத பல சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி அவர்கள் சமூக பணியை அங்கீகாரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா, நாகசாமி,மயிலசாமி அண்ணாதுரை ,மதுரை சின்னப்பிள்ளை ,நானம்மாள் விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணன், பங்காரு அடிகள்,ஆர்.வி .ரமணி ,பிரபு தேவா ,டிரம்ஸ் சிவமணி ,வெங்கடசாமி ,நர்த்தகி நடராஜ் என தமிழ்நாட்டின் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 29 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *