நவோதயா பள்ளிகள் – திராவிட கட்சிகள் செய்யும் அநீதி .

நாடெங்கும் ஜவகர் நாவோதயா வித்யாலயா என்று அழைக்கப்படும் நாவோதயா உண்டு உறைவிட பள்ளிகள் 660 உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்கிற விகிதத்தில் இந்தியாவெங்கும் நகர்ப்புறம் அல்லாத கிராம பகுதிகளில் இடங்களில் செயல்படும் இந்த பள்ளிகள் தமிழகத்தில் ஒன்று கூட கிடையாது.
 மத்திய அரசின் கொள்கையின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஜவஹர் நவோதயா  பள்ளி  நிறுவப்பட வேண்டும். அதன்படி, நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 2016-17 ஆம் ஆண்டில் 62 புதிய பள்ளிகள்  அனுமதிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, பட்டியல் பிரிவு மக்கள் தொகையை அதிக அளவில் கொண்ட மாவட்டங்களில் 10 புதிய பள்ளிகள்  அனுமதிக்கப்பட்டுள்ளன. . ஒவ்வொரு வித்யாலயாவும் வகுப்பறைகள், தங்குமிடங்கள், ஊழியர்கள்-குடியிருப்புக்கள், சாப்பாட்டு அறை மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளுக்கு போதுமான கட்டிடம் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதாவது. நாடக அரங்கங்கள், நூலகங்கள் மற்றும் ஆய்வகங்கள் முதலியன கொண்டு புதிய பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
30 ஆண்டுகளுக்கு மேலாக  நாடு முழுவதும் உள்ள கிராமப்புற ஏழை மாணவர்கள் பயன்படும் வகையில் தரமான  கல்வி (சிபிஎஸ்ஈ பாட திட்டம் ),உணவு ,இலவச பள்ளி விடுதி ,மருத்தவ காப்பீடு என முழுவதும் இலவசமான தரமான கல்வியைக் கொடுத்து கொண்டிருக்கும் இந்த நாவோதயா பள்ளிகள்  தமிழகத்தில் இல்லை. ஏன் ?
இங்கே  தொடர்ந்து ஆட்சி செய்து வரும் தமிழக ஆட்சியாளர்கள்  நாவோதயா பள்ளிகளை இங்கே வரவே கூடாது என்று தடுத்து வர காரணம் என்ன ? .
நாவோதயா பள்ளிகள் இந்தி மொழியை திணிக்கும் என்ற தவறான கருத்துக்களை தமிழகம் எங்கும் பரப்பி ,அந்த பள்ளிகளின் பயனாளர்களுக்கு இந்த திராவிட கட்சிகள் செய்யும் அநீதியை இங்கே யாரும் உணர்வதாக தெரியவில்லை.
இந்த நாவோதயாபள்ளியின் பயனாளிகள்  யார் ?
1986 ஆம்  மத்திய அரசால் கொண்டு வரப்பட்டஇந்த பள்ளிகளின் முக்கிய நோக்கம்  ,நகர்ப்புறம் அல்லாத கிராமப்புற மாணவர்களுக்கும்  தரமான கல்வியை கொண்டு சேர்ப்பதே .
கிராமப்புற மாணவர்களின் பொருளாதார சூழல் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்விக்கு தடையாக இருக்க கூடாது என்கிற நல்ல நோக்கத்தில் , இலவச கல்வியுடன், தங்கும் இடமும் ,பள்ளி சீருடை மற்றும் உதவி தொகை என அனைத்தும் மத்திய அரசின் நிதியுதவியுடன் வழங்கப்படும் .
75 விழுக்காடு இடங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு மட்டுமே. பட்டியல்  பிரிவு மாணவர்களுக்கான அரசு ஒதுக்கீடு படி இடங்கள்.
மூன்றில் ஓன்று இடங்கள்  பெண் குழந்தைகளுக்கு.  3 விழுக்காடு உடல் ஊனமுற்றவர்களுக்கு  என பயன் பெரும் மாணவர்கள்   நுழைவுத்தேர்வு  மட்டும் விதிமுறைகளின் படியே சேர்க்கப்படுகிறார்கள்.பள்ளிகளில்  மும்மொழி பாடத்த்திட்டம் .அதாவது தாய் மொழியில் பாடத்திட்டம் . பின் ஆங்கிலம்  மற்றும் மூன்றாவது  மொழியாக இந்தி பயிற்றுவிக்கப்படும் .
கிராம பகுதிகளில் மட்டுமே செயல்படக் கூடிய , ஏழை மற்றும் பட்டியல் பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே பயனளிக்க கூடிய இந்த பள்ளிகளை தொடர்ந்து எதிர்த்து. இந்த பள்ளிகளின் தரமான கல்வியை கிடைக்கவிடாமல் தமிழக திரவிட ஆட்சியாளர்கள் இந்த மக்களுக்கு செய்யும் இந்த அநீதியை   ,இந்த மக்களே இன்னும் உணராத நிலை தான் இங்கு உள்ளது.
மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் செயல்படும் இந்த பள்ளிக்கு, மாநில அரசு செய்ய வேண்டிய வேலை  30 ஏக்கர் இடம் கிராம பகுதியில்  ஒதுக்கி கொடுப்பது மட்டும் தான் .
இந்த இலவச பள்ளிகளை எதிர்ப்பதன் மூலம் , தனியார் பள்ளிகளின் அதீத வளர்ச்சிக்கே இந்த இந்த திராவிட ஆட்சியாளர்கள்  உதவி உள்ளனர் என்றே கூறலாம் .
பள்ளிகள் இல்லை. அதனால்  கிடைக்கும் தரமான  கல்வி இல்லை .
இந்த பள்ளிகளின் மூலம் கிடைக்க வேண்டிய ஆசிரியர்களுக்கான  வேலைவாய்ப்புகள்  இல்லை. பள்ளி இயங்குவதன் மூலம் நடைபெறும் அந்த கிராம பகுதியில் நடைபெறும் பொருளாதார செயல்பாடுகள் இல்லை .மொத்தத்தில்
இந்த பள்ளிகளை தொடந்து மறுப்பதன் மூலம் இந்த தமிழகத்திற்கு வர வேண்டிய பெரும் வாய்ப்புகள் இல்லை.
கேரளாவில் ,பாண்டிச்சேரியில் என எல்லா மாநிலங்களிலும் இருக்கும் இந்த பள்ளிகள் இங்கே இல்லை.
வெறும் வாட்சப் வதந்திகளை மட்டுமே நம்பி வாழும் இந்த தமிழ் சமூகம் இந்த நிலையை  புரிந்து கொள்ள என்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ.
மேலதிக தகவல்களுக்கு
https://navodaya.gov.in/nvs/en/Home1/
(Visited 203 times, 1 visits today)
3+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *