ஆளுங்கட்சி அலுவலகத்தில் ரெய்டு – பெண் போலீஸ் அதிகாரி நிமிடங்களில் பணியிட மாற்றம் , கேரளாவில்

சரிதா தெரிசா ஜான் திருவனந்தபுரத்தில் மகிளா போலிஸ் நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவரது சரக எல்லைக்கு உட்பட்ட மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தை மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பை சேர்ந்த குண்டர்கள் கல்லெறிந்து தாக்கினார்கள். போஸ்கோ வழக்கில் கைது செய்யப்பட்ட தங்களது கூட்டாளிகளை காண அனுமதி இல்லை என்றவுடன் காவல்நிலையத்தை தாக்கினார்கள்.

இக்கல்லெறி சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய பெண் அதிகாரி சரிதா தெரிசா ஜான் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நுழைந்து ரெய்டு நடத்தினார்.

இதனால் கடுப்படைந்த ஆளுங்கட்சி தலைவர்கள் கேரளா முதல்வர் அலுவலகத்தில் புகார் அளித்த சில வினாடிகளில் பெண் அதிகாரி சரிதா பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

பிணராயி விஜயன் தலைமையிலான கேரளா அரசின் இந்த நடவடிக்கை பொது மக்களிடம் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 15 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *