மதுரை வருகிறார் பிரதமர் மோடி;

மதுரை: இன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாடும்  விழாவைத் துவக்கி வைக்க பாரதப் பிரதமர் மோடி வருகிறார். மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை மற்ற மாநிலங்களுக்கு செய்வதைப் போல தமிழகத்திற்கும் கொடுத்து வருகிறது. அந்த வகையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியையும் தமிழக மக்களின் நலனுக்காகக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பல்வேறு நோயாளிகள் பலன் பெறுவார்கள். மேலும் பல்துறை நிபுணுத்துவம் பெற்ற, உலகத் தரம் வாய்ந்த மருத்துவர்களும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றுவர்.

ஐஐடி, என்இசி போன்ற மத்திய அரசின் உயர்கல்விக் கூடங்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலும் இன்றும் கிடையாது. தமிழகத்திற்கு மத்திய அரசின் பல்வேறு உயர்நிலைக் கல்லூரிகள் ஏற்கனவே மத்திய அரசின் திட்டங்கள் மூலம் கிடைத்திருக்கிறது. தற்போது மோடி ஆட்சியில் மற்றொரு உயர்வசதி பெற்ற மருத்துவமானையும் கிடைக்க உள்ளது. சில தினங்களுக்கு முன்பாக இந்தியாவில் அமைக்கப்படும் 13 மத்திய அரசின் பல்கலைக் கழகங்களில் ஓன்று, தமிழகத்திற்கும் கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 3 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *