2018 ல் தெற்கு இந்திய ரயில்வேயின் வருவாய் 10% உயர்ந்துள்ளது

சென்னை: 2017 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2018 ஆம் ஆண்டில் மொத்த வருவாயில் 10% உயர்ந்துள்ளது என்று தெற்கு இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ஏப்ரல்-டிசம்பர் கால அளவுக்குள் , 6150 கோடியை தெற்கு இந்திய ரயில்வே வருவாயாகப் பெற்றுள்ளது. மக்கள் பயணம் செய்வதன் மூலம் 3,331 கோடி வருவாய் வந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4.6% அதிகரித்துள்ளது.

2017 ஆம் ஆண்டில்  604.16 மில்லியன் மக்கள் பயணம் செய்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில் 630.36 மில்லியன் மக்கள் பயணம் செய்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் 54 ரயில்கள் கூடுதலாக விடப்பட்டுள்ளதாகவும், 2018 ஆம் ஆண்டில் மட்டும் 8 பெயர் வைக்கப்பட்ட  ரயில்களும், கூடுதல் ரயில்களாக 8 ரயில்களும்  விடப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *