செய்திகள்விளையாட்டு

டிஜோகோவிக் ஆஸி. சாம்பியன் பட்டத்தை வென்றார்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் 2019 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றுடன் அனைத்துப் போட்டிகளும் நிறைவுபெறுகிறது. இன்று ஆடவர்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டி நடந்தது.

ஆடவர் இறுதிப்போட்டியில் செர்பியாவின் டிஜோகோவிக் (1 வது இடம்) , ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடாலை (2 வது இடம்) எதிர்கொண்டார். உலகின் இரு முதல் நிலையில் உள்ள இரு வீரர்களும் எதிர் கொண்டதால்  ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.

ஆனால் இன்றைய போட்டியில் டிஜோகோவிக் 6-3, 6-2, 6-3  என்ற நேர் செட்களில் எளிமையாக வென்றார். இதன் மூலம் கோப்பையைக் கைப்பற்றியதுடன் உலகில் முதல் நிலை வீரர் என்பதையும் தக்க வைத்துக் கொண்டார் டிஜோகோவிக். பெண்கள் பிரிவில் ஜப்பானின் ஓசாகாஆஸி, கோப்பையை  வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 19 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close