சாய்னா நேவால் இதோனேசிய சாம்பியன் பட்டம் வென்றார்
ஜகார்த்தா: இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரில் , இன்று இறுதிப் சாய்னா நேவாலுக்கும், கரோலினா இருவரும் மோதினார்கள். இறுதிப் போட்டி நடந்து கொண்டிருக்கையில் , காயம் காரணமாக ஸ்பெயினின் கரோலினா காயத்தால் பாதியில் விலகினார்.
இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பைனலில் தரவரிசையில் 9வது இடத்திலுள்ள இந்தியாவின் சாய்னா, ‘நம்பர்-4’ வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர் கொண்டார். முதல் செட்டில் கரோலினா 9-3 என முன்னிலையில் இருந்தார். அப்போது, செய்னா அடித்த பந்தை திருப்பி அனுப்ப முயற்சி செய்தபோது, கரோலினா தவறி விழுந்தார்.
வலது காலின் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் வலியால் துடித்தார். மீண்டும் விளையாடத் துவங்கிய சில நொடிகளிலேயே வலி அதிகமாகக் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் போட்டியில் தொடர இயலாமல பாதியிலேயே விலகுவதாக அறிவித்தார். இதனால் சாய்னா நேவால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டத்தை பெற்றார்.