கன்யாகுமரியில் திருப்பதி- பக்தர்கள் பரவசம்

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 2013 ம் ஆண்டு ஜூன் மாதம் கன்யாகுமரி அருகில் விவேகானந்த புரத்தில் திருப்தி வெங்கடேச பெருமாள் திருக்கோயிலை கட்ட ஆரம்பித்தது. கோவில் கட்டுவதற்காக சுமார் 2.5 ஏக்கர் இடம்  கன்யாகுமரி விவேகானந்த கேந்திரம் அதன் வளாகத்தில் வளங்கியது

கோவிலின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் இன்று கோவிலின் கும்பாபிஷேகம் திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

கன்யாகுமரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

சுமார் 22 கோடி செலவில் கட்டுப்பட்டுள்ள இந்த வெங்கடேச பெருமாள் கோயில் திருமலை கோவிலைப் போன்றே எல்லாவிதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முடி காணிக்கைக்கான இடம், லட்டு பிரசாதம் மற்றும் அர்ச்சகர்கள் தங்கும் விடுதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தமிழ் நாட்டில் அமைந்துள்ள முதல் கோவில் இதுவேயாகும். இதே போன்ற வெங்கடேச பெருமாள் கோவில்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஹைதராபாத்,பெங பெங்களூர் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

(Visited 30 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *