மூன்றாவது ஒருநாள் போட்டி: இந்தியா வெற்றி ;தொடரையும் வென்றது
நியுஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி , ஒருநாள் தொடரின், மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. அதில் டாஸ் வென்ற நியுஸிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 50 ஓவர்களில் நியுஸிலாந்து அணி 3அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்களை எடுத்தது. நியுஸிலாந்து அணியில் டேய்லர்93, லாதம் 53 ரன்களை எடுத்தனர். இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் 2, சாமி 3, சாகல் 2, ஹர்திக் பாண்ட்யா 2விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்திய அணி 43 ஓவர்களிலேயே வெற்றி இலக்கான 244 ரன்களை அடைந்தது. இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் கோலி 60 ரன்கள் , ரோஹித் ஷர்மா 62 ரன்கள் எடுத்தனர். ஆட்டமிழக்காமல் அம்பத்தி ராயுடு 40 ரன்கள் , தினேஷ் கார்த்திக் 38 ரன்களை எடுத்தனர். ஷிகர் தவானும் 28 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.