பள்ளிகளில் பிரார்த்தனை சொல்வது மதச்சார்பு அல்ல – உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களான அஸதோமா ஸத்கமய என்ற பிரார்த்தனையும் ஸஹனாவவது என்ற பிரார்த்தனையும் இடம்பெறுவது அரசியல் சாசனத்தின் 19ஆவது மற்றும் 28ஆவது பிரிவுகளையும் மீறுவதாக உள்ளது என்றும் அவற்றை நிறுத்த வேண்டும் என்றும் ஜபல்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் விநாயக் ஷா என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இது பல கட்டங்களைத் தாண்டி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விநாயக் சார்பில் ஆஜரான வழக்கறிஞரின் வாதத்திற்கு பதிலளித்து அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடினார். அப்போது அவர் இந்த ஸ்லோகங்களை சொல்வது மதத்திணிப்பு ஆகாது.

இவற்றின் பொருள் “பொய்மையில் இருந்து மெய்மைக்கும், இருளில் இருந்து ஒளிக்கும், அழிவுத்தனமையில் இருந்து அழியாத்தனமைக்கும் இட்டுச்செல்க” என்ற பிரார்த்தனையே.

அதே போல ஸஹனாவவது என்பது ஆசிரியர் மாணவர் இருவரும் இறை சக்தியால் காக்கப்பட்டு கற்பதில் ஈடுபடவேண்டும் என்பதே. இவற்றில் மதம் திணிக்கப்படுகிறது என்பது அடிப்படையற்ற புகார் என்று மேத்தா வாதாடினார்.

நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் “உபநிஷத்துக்களில் இருந்து தானே அஸதோமா பாடல் எடுக்கப்பட்டது. எப்படி மதம் சார்ந்ததில்லை என்கிறீர்கள்” என்று கேட்டார்.

அதறகு அரசு வழக்கறிஞர் மேத்தா பதிலளிக்கையில் “உச்சநீதிமன்றத்தின் சின்னத்தில் யதோ தர்மஸ் ததோ ஜய: என்ற வாக்கியம் உள்ளது, அது பகவத்கீதையில் உள்ள வாக்கியம். அதனால் நீதிமன்றம் மதசார்பானது என்று சொல்லமுடியாது. அதே போலத்தான் உபநிஷத் வாக்கியங்களும் மதம் சார்ந்தவை என்பதை விட வாழ்வுக்கு வழிகாட்டுபவை என்பதே உண்மை” என்றார்.

ஆனால் மனுதாரரின் வழக்கறிஞர் இதுபோல எல்லாவற்றையும் இறை சார்ந்தே சிந்திக்க கற்றுத்தந்தால் மாணவர்களுக்கு அறிவியல்பூர்வமான சிந்தனை வளராது என்று வாதிட்டார்.

நீதிபதி நாரிமன் வழக்கு அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட வேண்டியது என்று தாம் உறுதியாக எண்ணுவதாகச் சொல்லி அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு அனுப்பி உத்தரவிட்டார்.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்த போது “ கடவுளை நம்பி உபநிஷத் உள்ளிட்டவையும் அறிவியல் கல்வியும் கற்ற சர்.சி.வி.ராமன் அதே ஸம்ஸ்க்ருத பாடல்கள் மூலம் ஒளிச்சிதறலுக்கு விஞ்ஞான விளக்கம் கண்டுபிடித்து நோபல் பரிசு வென்றார். அவருக்கு முன்னும் பின்னும் மதசார்பற்றவர் என்று இறைமறுப்பு பேசிய யாரும் விஞ்ஞானத்தில் பெரிய சாதனைகள் படைத்ததாக தகவல் இல்லை” என்று கூறினர்.

வழக்கு அரசியல் சாசன அமர்வில் என்ன முடிவாகியது என்று கல்வியாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

(Visited 88 times, 1 visits today)
4+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *