ஓட்டுப்போடலைன்னா காசை திருப்பித் தா – தெலுங்கானாவில் அதிரடி

தெலுங்னாகாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் அதிருப்தியாளர் பிரபாகர் தன் மனைவி உப்பு ஹிமவதியை தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நிறுத்தினார். ஜனவரி 25 அன்று தேர்தல். அதற்கு முன்னான பிரச்சாரத்தில் பிரபாகர் ஊர் மக்களுக்கு ஓட்டுக்கு ₹500 முதல் ₹700 வரை கொடுத்து ஓட்டுக்கேட்டார்.

தேர்தல் முடிந்து முடிவுகள் வந்தபோது ஹிமவதி மொத்தமுள்ள 264 வாக்குளில் 24 வாக்குகள் மட்டுமே பெற்று பரிதாபமாக தோற்றார். இதில் கடுப்பான பிரபாகர் ஊர்மக்கள் பலரிடம் சண்டை போட்டு “ஓட்டு போடலை, காசை திருப்பித்தா” என்று கேட்டுள்ளார். பலர் மறுத்துள்ளனர்.

டைம்ஸ் நவ் வெளியிட்ட காணொளி

இந்நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் பிரபாகரிடம் “அவருக்கு கடன் கொடுத்தீர்களா?” என்று கேட்க “நீ காசு வாங்கலையே! பேசாம போ” என்று பிரபாகர் எகிறியுள்ளார். அப்போது விவரம் கேட்டு விடியோ எடுத்துள்ளார் அந்த நபர். பிரபாகர் கடைசியாக மக்களிடம் “கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன், காசை திருப்பி கொடுங்கய்யா!” என்று கெஞ்சியுள்ளார்.

பலரும் கொஞ்சம் கொஞ்சமாக திருப்பித்தர வாக்களித்துள்ளார்களாம். “வாங்கின காசுக்கு வஞ்சனை பண்ணலாமா? இது தப்பில்லையா?” என்று பிரபாகர் புலம்புகிறாராம். இது தேர்தலா ஏலமா என்று கிராமத்தார் ஒருவர் கேட்டுள்ளார். காசு வாங்கும்போது ஏன் இதெல்லாம் கேட்கவில்லை என்கிறார் பிரபாகர்.

இது குறித்து அரசும் மாநில தேர்தல் அதிகாரியும் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். மறுபடி தேர்தல் வைத்தால் பிரபாகர் எவ்வளவு கொடுப்பார், மீண்டும் திரும்பிக் கேட்டு சண்டைக்கு வருவாரா என்றும் கிராமத்தார் விவாதிக்கின்றனர். பிரபாகரோ செலவு செய்த காசு திரும்ப வந்தால் போதும் என்கிறாராம்.

(Visited 21 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *