லோக்பால், லோக் ஆயுக்தாவைக் கோரி மீண்டும் அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்

மும்பை:  லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாஆகிய  சட்டங்களைக் கொண்டுவர வலியுறுத்தி,  அன்னா ஹசாரே இன்று  உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் அவரது சொந்த ஊரான ரலேகான் சித்தியில் இந்த உண்ணா விரதம் தொடங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு  அன்னா ஹசாரே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதற்கிடையே பட்னாவிஸின் மகாராஷ்டிர  அரசு  லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டுவருவது தொடர்பாக நேற்று முக்கிய முடிவு எடுத்துள்ளது

அன்னா ஹசாரேவின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக தெரிவித்த அவர், உண்ணா விரதத்தை ஹசாரே அவர்கள் கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்..

ஊழலை ஒழிக்கும் வகையில் தேசிய அளவில் லோக்பால் அமைப்பையும், ஒவ்வொரு மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைப்பையும் அமைக்க வேண்டும் என்பது ஹசாரேவின் நீண்டகால  கோரிக்கையாக உள்ளது.

லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், லோக்பால் அமைக்கப்படவில்லை என்று மோடி அரசு மீது ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.
தனது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அறிவித்த பின்னரே உண்ணாவிரதத்தை கைவிடுவேன் என்றும் ஹசாரே கூறியுள்ளார்.

(Visited 4 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *